அரசியல்

இபிஎஸ்க்கு இரட்டை ஷாக்... தவெகவுக்கு செல்லும் விஜயபாஸ்கர்கள்!

By Sumalekha
30 Jun 2026, 05:28 PM
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் தங்களின் ஆதரவாளர்களுடன் நாளை மறுநாள் (ஜுலை 2 )தவெகவில் இணைய உள்ளனர்.
அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி,விஜயபாஸ்கர். விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்ற நிலையில் சில நாட்களுக்கு முன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இவரைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம் ஆர் விஜயபாஸ்கர் கரூர் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்ற நிலையில் நேற்று (ஜுன் 29) தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த இரு எம்எல்ஏக்களும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மீது ஏற்பட்ட அதிருப்தியால் தவெகவில் இணைய இருப்பதாக தகவல் பரவின.
இந்நிலையில் நாளை மறுநாள் (ஜுலை 2) மாமல்லபுரத்தில் 4 பாயிண்ட்ஸ் ஹோட்டலில் நடக்கும் தவெக இணைப்பு விழாவில் கலந்து கொண்டு தவெகவின் அமைச்சர்களான ஆனந்த்,ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னதாக( ஜுன் 29) ஆம் தேதி முதலமைச்சர் தவெக தலைவருமான விஜய் முன்னிலையில் விஜயபாஸ்கர் இணைய இருப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால் (ஜுன் 29,30,) ஆகிய இரு நாட்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடந்ததால் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டதால் இந்நிகழவு தள்ளிபோடப்பட்டது. இந்நிலையில் ஜுலை 2 ஆம் தேதி சிவி விஜயபாஸ்கர் எம் ஆர் விஜயபாஸ்கர் தவெகவில் இணைய இருப்பதாக நம்பதகுந்த செய்தியை தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையில் தவெகவின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் சி.விஜயபாஸ்கர் மீது சொத்துகுவிப்பு வழக்கு ,ஊழல் வழக்கும் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது நில மோசடி வழக்கும் இருப்பதால் தவெகவில் இணைக்க வேண்டுமா? என்று மூத்த நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் தங்களை நம்பி வருபவர்களை கைவிடாது என்ற நிலையில் தவெகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கபட உள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பனையூர் தவெக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்க ஒன்று.