இந்தியா

சோனியாகாந்தி திடீர் மருத்துவமனையில் அனுமதி

By Jayakumar
16 Jun 2025, 07:58 AM
சோனியா காந்தி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயிறு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக சோனியா காந்தி தலைநகர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.

சோனியா காந்தி அனுமதி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான சோனியா காந்தி (78) ஞாயிற்றுக்கிழமை( ஜூன்15) வயிற்றுப் பிரச்சினை காரணமாக தலைநகர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.

சோனியா காந்தி மருத்துவமனையில் இரைப்பைப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, ஜூன் 7 ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார்.

வழக்கமான சுகாதாரப் பரிசோதனை

இமாச்சலப் பிரதேச முதல்வரின் முதன்மை ஆலோசகர் (ஊடகம்) நரேஷ் சவுகான் கூறுகையில், சில சிறிய உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, சோனியா காந்தி வழக்கமான சுகாதாரப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார்.

அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் சீராக இருப்பதாக தெரிவித்தனர். சோனியா காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.