திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி மோகன்.சமீப காலமாகவே இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வந்துக் கொண்டிருக்கின்றார்.திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்து போவதாக கூறி அவருடைய மனைவி விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார்.
இது சமூக வலைதளங்களில் எல்லாம் மிக பரப்பாக போய்க் கொண்டிருந்தது.இதில் மிகவும் பாதிக்கப்பட்டு தன் மகனை பார்க்க கூட அனுமதி கொடுக்கவில்லை என்று கண்ணீர் மல்க இவர் அளித்த பேட்டி அனைவரும் மத்தியில் அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில் தான் ரவி மோகன் வீட்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.சென்னை நீலாங்கரை பகுதியில் வசிக்கும் மோகன் வீட்டில் பணிபுரிகின்ற இரு பெண்களை அவர் வீட்டிலேயே கட்டி வைத்து மிரட்டியதாக ஒரு அதிர்ச்சியான தகவல் பரவி வருகின்றது.
நேற்று ரவி மோகன் வீட்டிற்கு சென்று இரு பணிப்பெண்கள் வீடு திரும்பவில்லை என்று பெண்களின் வீட்டில் உள்ள உறவினர்கள் காவல் துறையிடம் பணிக்கு சென்ற பெண்களை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காவல் துறையினர் விரைந்து ரவி மோகன் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது வீட்டில் உள்ள பொருள்களை திருடிவிட்டதாக ரவி மோகன் குற்றஞ்சாட்டினார்.
அதனால் பணிப்பெண்களோடு சேர்த்து அவர்களின் மகனையும் கைது செய்து வைத்தேன் என்று காவல் துறையிடம் கூறினார்.இதற்கிடையில் காவல் துறையினர் அளித்த பதிலாவது குற்றச் சம்பவங்கள் நடந்தால் அதற்கு எங்களிடம் புகார் அளிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம் என்று கூறினார்கள். இதற்கிடையில் நீங்களாக எதுவும் செய்யக் கூடாது என்று கண்டித்து சிறைவைக்கப்பட்ட பெண்களை விடுவித்து அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவ்வட்டாரத்தில் சற்று சலசலப்பு நிலவியது.