மேஷம்
எண்ணம்போல ஏற்றம் வரக்கூடிய கால கட்டம். இல்லத்தில் உங் கள் செல்வாக்கு உயரும். குடும் பத்தில் நிம்மதி நிறையும். தடைபட்ட சுபகாரியங்கள் மனம்போலக் கைகூடிவரும். பெற்றோருடன்தர்க்கம் வேண் டாம். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்கு எதிர் பாராத இடமாற்றம் வர லாம். நடுத்தர வயதினருக்கு, ஹார்மோன் உபாதைகளில் கவனம் தேவை. தலைவலி, தூக்கமின்மை போன்ற பிரச் னைகள் வரலாம். அங்காளம்மன் வழிபாடு, ஆனந்தம் தரும்.
கடகம்
நல்லவை அதிகரிக்கும் காலகட்டம். வீட்டில் விசேஷங்கள் வரத் தொடங்கும்.வர வேண்டிய தொகைகள் தடைப்பட்டிருந்தால் இனி கைக்கு வந்து சேரும். புதிய கடன்களைத் தருவதையும் பெறுவதையும் தவிருங்கள். பாரம்பரிய சொத்து ஆதாயம் தரும். வயதில் முதியவர்கள் வழுக் கலான இடங்களில் கவனமாக இருங்கள். பணி புரியும் இடத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்கு பதவி, பாராட்டுகளும் கிட்டும். தூக்கமின்மை, அல்சர் உபாதை வரலாம். காளியம்மன் வழிபாடு, களிப்பு தரும்.
ரிஷபம்
திறமைக்கு ஏற்ற பெருமைகள் வரக்கூடிய காலகட்டம். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாரிசுகளால் பெருமை உண்டு. வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் தேவை.தரல்,பெறலில் நிதா னம் தேவை. அடுக்களையில் அலட்சியம் கூடாது. அலுவல கத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கைகூடி வரும். மூன்றாம் நபர் குறைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். கூரான பொருள்களை கையாளும்போது கவனம் தேவை. அடிவயிறு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு, துளிர்க்கச் செய்யும்.
சிம்மம்
நிதானமாகச் செயல்படவேண்டிய கால கட்டம். குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். வார்த்தைகளால் அதனை உடைக்க வேண்டாம். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். சொத்துகளை வாங்கு வது, விற்பதில் நிதானம் தேவை. புதிய நபர்களிடம் அதிக நெருக் கம் வேண்டாம். பணத்தை கவனமாகக் கையாளுங்கள். அலுவலகத்தில் எந்த சச்சரவுகளிலும் சிக்காமல் இருப்பதே நல்லது. இருப்பதை விடுவதற்கு இது உகந்த நேரம் அல்ல. கண், பல் உபாதைகள் வரலாம். கோமதியம்மன் வழிபாடு, வாழ்வில் கோலாகலம் சேர்க்கும்.
மிதுனம்
நாவடக்கம் இருந்தால், நல்லவை நடக்கும் காலகட்டம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போனால், சுமுகச் சூழல் நிலவும். உறவுகளிடம் குதர்க்கம் வேண்டாம். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடி வரும். தந்தை உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். பூர்வீக சொத்தில் விட்டுக்கொடுப்பது நல்லது. பணியிடத்தில் வீண் ரோஷம் கூடாது. யாரிடமும் பகை, சச்சரவு வேண்டாம். பணத்தை மிக கவனமாகக் கையாளுங்கள். நரம்பு, எலும்பு உபாதைகள் வர லாம். மாரியம்மன் வழிபாடு, மகிழ்ச்சி சேர்க்கும்.
கன்னி
உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிடைக்கக் கூடிய காலகட்டம். தேவையற்ற டென்ஷன் தவிர்த்தால், மற்றவை ஏற்றமாகும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். உங்கள் மதிப்பு உயரும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் ஏற்படும். சூடான பொருள்களை கவனமாகக் கையாளுங்கள். குழந்தைகளிடம் அதீத கண்டிப்பு வேண்டாம். அலுவலகத்தில் திட்டமிட்டுச் செயல்படுங்கள். யாருக்கும் வாக்குறுதிகள் தர வேண்டாம். அலர்ஜி, நரம்பு உபாதைகள் வரலாம். பார்வதி வழிபாடு, பசுமை சேர்க்கும்.
துலாம்
முயற்சிகள் பலனளிக்கும் கால கட்டம். குடும்பத்தில் சீரான போக்கு நிலவும். பலகாலக் கனவுகள் பலிதமாகத் தொடங் கும். விடுபட்டிருந்த தெய்வ வழிபாடுகள் கைகூடி வரும். வாரிசுகளால் பெருமை சேரும். ஆடை, ஆபரணம் சேரும். அலு வலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். வாகனத்தில் எப்போதும் வேகம் கூடவே கூடாது. காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். பைரவி வழிபாடு, பசுமை சேர்க்கும்.
விருச்சிகம்
திறமை பளிச்சிடும் காலகட்டம். இதுவரை மனதில் இருந்த இனம்புரியாத பயம் நீங்கும். வீட்டில் விடியல் வெளிச்சம் பரவத்தொடங்கும். உறவுகள் வருகையால் ஆதாயம் ஏற்படும். வார்த்தைகளில் மட்டும் நிதானம் தேவை. வாரிசுகள் மனம்போல சுபகாரியங்கள் கைகூடும். பெற் றோர் உடல்நலம் சீராகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பெருமைகள் கைகூடி வரும். சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.சுளுக்கு, அஜீரண உபாதைகள் வரலாம். வாராஹி வழிபாடு, வளமை சேர்க்கும்.
தனுசு
சிந்தித்து செயல் பட்டால், சிறப்புகள் சேரக் கூடிய காலகட்டம். இல்லத்தில் உறவுகளுடன் தர்க்கம் வேண் டாம். சுப நிகழ்வுகளில் ஆடம் பரம் தவிருங்கள். கடன்களை மறைமுகமாக அல்லாமல் நேரடி யாகப் பைசல் செய்யுங்கள். இனிமை இடம்பிடிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் தர வேண்டாம். பணியிடத்தில் வீண் ரோஷம் கூடாது. பொறுப்புகளில் திட்டமிடல் முக்கியம். தூக்கத்தை முறைப்படுத்துங்கள். அடிவயிறு, கழுத்து உபாதைகள் வரலாம். இஷ்ட அம்மன் வழிபாடு, இனிமை சேர்க்கும்.
மகரம்
உன்னதமான சூழல் உருவாகும் கால கட்டம். குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். உங்கள் வாக்கின் மதிப்பு அதிகரிக்கும். உறவுகளிடையே அன்யோன்யம் உருவாகும். குடும்ப விஷயம் பொது இடங்களில் பேசாதீர்கள்.. வாரிசுகள் வாழ்வில் பெருமை சேரும். பழைய கடன்கள் பைச லாகும். குல தெய்வ வழிபாடு கைகூடி வரும். அலுவலகத்தில் அனுகூலக் காற்று வீசும். பதலி, பாரட்டுக்கு வாய்ப்பு உண்டு. தொடைப்பகுதி, இடுப்பு உபாதை கள் வரலாம். மாரியம்மன் வழி பாடு, மகிழ்வு சேர்க்கும்.
கும்பம்
மன பயங்கள் நீங்கி, நிம்மதி நிறையக் கூடிய காலகட்டம். இல்லத்தில் சீரானபோக்கு நிலவும். தம்பதியர் இடையே அன்யோன்யம் ஏற்படும். வாரிசுகள் வளர்ச்சி மகிழ்ச்சி தரும். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். யாரிடமும் தேவையற்ற வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிருங்கள். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கைகூடி மகிழ்ச்சி தரும். பித்த அதிகரிப்பு, தலை வலி உபாதைகள் வரலாம். நாகாத்தம் மன் வழிபாடு, நன்மை தரும்.
மீனம்
அமைதியாகச் செயல்படவேண்டிய கால கட்டம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தரல், பெறலில் நிதானம் தேவை. விலை உயர்ந்த பொருள்களை பத்திரமாக வையுங்கள். பிறமொழி மனிதர் களிடம் எச்சரிக்கையாக இருங்கள். பெரியவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அலுவலகத்தில் அடக்கமே நல்லது. பொறுப்புகளை திட்ட மிட்டுச் செய்யுங்கள். கூரான பொருள்களில் கவனம் தேவை. முதுகு, அடிவயிறு உபாதைகள் வரலாம். காமாட்சியம்மன் வழிபாடு, களிப்பு தரும்.