மேஷம்:
வாக்குல கவனம் இருந்தா, நன்மைகள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல உங்க திறமை பாராட்டப் படும்க. சினம் தவிர்த்தால் சீரான நன்மை கிட்டும்க. குடும்பத்துல அன்யோன்யம் அதிகரிக்கும்க. உறவுகள், நட்புகளிடையே பிரிவுநிலை மாறும்க. பணவரவு அதிகரிக்கும்க. பூமி சார்ந்த விஷயங்கள் ஆதாயம் தரும்க. சுபகாரியத் தடைகள் விலகும்க. செய்யும் தொழில்ல வளர்ச்சி உருவாகும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு அனுகூலக் காற்று வீசும்க. பயணங்கள்ல உடைமை பத்திரம்க. தலைவலி, தூக்கமின்மை, முதுகு உபாதைகள் வரலாம்க. செவ்வாய்க் கிழமைகள்ல முருகனை ஆராதியுங்க. பெருமைகள் சேரும்.
ரிஷபம்:
பொறுமையாக இருக்க வேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல பொறுப்புகள் அதிகரிக்கலாம்க. எதிர்பாராத இடமாற்றம் வந்தா மறுக்காம ஏற்றுக்குங்க. வீட்டுல விசேஷங்கள் வரத்தொடங்கும்க. வாரிசுகளிடம் வீண் கடுமை வேண்டாம்க. குடும்ப விஷயத்துல மூன்றாம் நபர் தலையீட்டைத் தவிருங்க. கொடுக்கல் வாங்கலை உடனே குறிச்சுவையுங்க. வீடு, மனை விஷயத்துல அலட்சியம் கூடாதுங்க. செய்யும் தொழில்ல புதிய முதலீடு தவிருங்க.
அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு அமைதி அவசியம்க. தேவையற்ற பயணத்தை தவிருங்க. காது, மூக்கு, தொண்டை, உபாதைகள் வரலாம்க. புதன் கிழமைகள்ல பெருமாள் தாயார் அனுமனை வணங்குங்க. வாழ்க்கைல பெருமை சேரும்.
மிதுனம்:
கவனமாகச் செயல்படவேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல பொறுப்பு உணர்வு முக்கியம்க. யாரிடமும் வீண் வாதம்கூடாதுங்க. குடும்பத்துல குத்தலும் குதர்க்கமும் கூடாதுங்க. உறவுகள் யாரையும் உதாசீனப்படுத்தறதும் தவறுங்க. சகோதர உறவுகளால் பெருமை சேரும்க. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமா பார்த்துக்குங்க. மூன்றாம் நபர் விஷயத்துல தலையிடுவதை தவிருங்க. சமையலறையில் கவனமா இருங்க. செய்யும் தொழில்ல சோம்பலைத் தவிருங்க. அரசியல், அரசு சார்ந்தவங்க அமைதியாக இருங்க. வாகனத்துல சிறிய பழுதையும் உடனே சரி செய்யுங்க. நரம்பு, கண் உபாதைகள் வரலாம்க. ஞாயிற்றுக் கிழமைகள்ல அனுமனை வணங்குங்க. வாழ்க்கை செழிக்கும்.
கடகம்:
வாழ்க்கைச் சக்கரம் சீராக சுழலத் தொடங்கும் காலகட்டம்க. பணியிடத்துல மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த திரை விலகும்க. உங்க வாக்குக்கு மதிப்பு கூடும்க. வீட்டுல விசேஷங்கள் படிப்படியா வரத்தொடங்கும்க. பெற்றோர், பெரியோர் ஆலோசனைகளை கேளுங்க. வாழ்க்கைத் துணை உடல் நலத்தை கவனியுங்க. வாரிசுகளால் பெருமை ஏற்படும்க. செய்யும் தொழில்ல ஏற்றம் ஏற்படும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு பெருமை பதவி அதிகரிக்கும்க. பயணத்துல போதுமான ஓய்வு அவசியம்க. கர்ப்பிணிகள் கவனமா இருங்க. வயிறு, அலர்ஜி உபாதைகள் வரலாம்க. சனிக் கிழமைகள்ல தும்பிக்கையானைத் துதியுங்க. வாழ்க்கை மணக்கும்.
சிம்மம்:
அவசரமும் அலட்சியமும் தவிர்க்கவேண்டிய காலகட்டம்க. அலுவலகத்துல நிதானமும் நேரடி கவனமும் இருந்தா, சங்கடங்களைத் தவிர்க்கலாம்க. மூன்றாம் நபர் பொறுப்புல உங்க பணி எதையும் ஒப்படைக்க வேண்டாம்க. குடும்பத்து ரகசியங்களை யாரோடும் பகிர்ந்துக்கறது கூடாதுங்க. வீண் ரோஷமும் வேண்டாத சினமும் தவிர்க்கணும்க. வாழ்க்கைத் துணை ஆலோசனைகளை அவசியம் கேளுங்க. செய்யும் தொழில்ல சோம்பல் கூடாதுங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க வீண் ஜம்பம் தவிருங்க. வாகனத்துல வேகம் கூடவே கூடாதுங்க. நரம்பு, எலும்பு, பல் உபாதைகள் வரலாம்க. வியாழக் கிழமைகள்ல தட்சிணாமூர்த்தியை வணங்குங்க. வாழ்க்கை தழைக்கும்.
கன்னி:
நாவடக்கம் இருந்தால் நன்மைகள் 5 அதிகரிக்கக் கூடிய காலகட்டம்க. பணியிடத்துல இடமாற்றம், பணி மாற்றம் வந்தால் மறுக்காம ஏற்றுக்குங்க. இன்சொல் பேசினால் மட்டுமே இல்லத்துல நிம்மதி நிலவும்க. சுபகாரியங்கள்ல் திடீர் தடை ஏற்படக் கூடும்க. குலதெய்வத்தை தவறாம வழிபட்டா குறைகள் எல்லாம் தீரும்க. குழந்தைகளால் பெருமை உண்டுங்க. செய்யும் தொழில்ல கவனம் அவசியம்க. அரசியல், அரசு சார்ந்தவங்க கையெழுத்திடுகையில் கவனமா இருங்க. பயணத்தை பகலிலேயே தொடங்குங்க. கழிவு உறுப்பு, முதுகு உபாதைகள் வரலாம்க. வியாழக் கிழமைகள்ல நரசிம்மரை வணங்குங்க. நல்லதே நடக்கும்.
துலாம்:
அமைதியாகச் செயல்படவேண்டிய காலகட்டம்க. அலுவலகத்துல நேரடி கவனமும் நேரம் தவறாமையும் முக்கியம்க. உயரதிகாரிகளிடம் வீண் வாதம் வேண்டாம்க. இல்லத்துல விட்டுக் கொடுத்தல் அவசியம்க. வாழ்க்கைத் துணை உடல் நலம் சீராகும்க. வாரிசுகள் நடத்தையில கவனம் செலுத்துங்க. சுபகாரியங்கள்ல ஆடம்பரம் வேண்டாம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க, பொது இடங்கள்ல கவனமா இருங்க. செய்யும் தொழில்ல வர்த்தகக் கடன்கள்ல அலட்சியம் வேண்டாம்க. பயணத்துல வேகம் தவிருங்க. சுளுக்கு, ரத்தகாயம் ஏற்படலாம்க. திங்கட் கிழமைகள்ல சிவனை வழிபடுங்க. வாழ்க்கை பசுமையாகும்.
விருச்சிகம்:
எச்சரிக்கையாக இருக்க 23 வேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல படபடப்பும் பரபரப்பும் கூடாதுங்க. வீண் ரோஷம், விவேகம் இல்லைங்க. வீட்டுல விட்டுக் கொடுத்துப் போவது அவசியம்க. குலதெய்வத்தை கும்பிட்டா நல்லவை நடக்கும்க. சுபகாரியங்கள்ல பெரியவங்க வார்த்தைகளுக்கு மதிப்பு குடுங்க. செய்யும் தொழில்ல நேரான செயல்பாடு முக்கியம்க. புதிய முதலீடுகளை தவிருங்க. அரசு, அரசியல் சேர்ந்தவங்க தொலைபேசியில்கூட வார்த்தைகளை நிதானிச்சு பேசுங்க. பயணப்பாதை நட்புகளிடம் விலகியே இருங்க. சளி, தொண்டை உபாதைகள் வரலாம்க. சனிக்கிழமைகள்ல பைரவரை வணங்குங்க. வாழ்க்கை பசுமையாகும்.
தனுசு:
தொட்டது துலங்கும் காலகட்டம்க. அலுவலகத்துல உங்க பெருமை அதிகரிக்கும்க. இந்த சமயத்துல தற்பெருமை உயர்ந்துடாம பார்த்துக்கறது நல்லதுங்க. மனையில மகிழ்ச்சி தங்கும்க. அது கெடாம இருக்கணும்னா நீங்க வீண் கோபம் தவிர்க்கணும்க. மனம்போல மணமாலையும் மகப்பேறும் கிட்டும் அறிகுறிகள் தெரியும்க. செய்யும் தொழில்ல லாபம் பெருகும்க. அரசு, அரசியல் துறையினருக்கு திடீர் பதவி, பொறுப்பு கிட்ட வாய்ப்பு உண்டுங்க. வாகனத்துல செல்லும்போது லாகிரிக்கு இடம்தர வேண்டாம்க. பாதம், அடிவயிறு உபாதைகள் வரலாம்க. வியாழக்கிழமைகள்ல ராகவேந்திரரை வணங்குங்க. வாழ்க்கை ரம்யமாகும்.
மகரம்:
உன்னதமான காலகட்டம்க. பணியிடத்துல உங்க செல்வாக்கு அதிகரிக்கும்க. வெளிநாடு, வெளியூர் பயண வாய்ப்பு வரலாம்க. இல்லத்துல இனிமை இடம்பிடிக்கும்க. வாரிசுகளிடம் பேசும்போது வார்த்தைகள்ல நிதானம் முக்கியம்க. மனம்போல திருமண வாய்ப்புகள் கிட்டி மகிழ்ச்சி அதிகரிக்கும்க. பெற்றோர் உடல்நிலையில் கவனம் செலுத்துங்க. கூட்டுத்தொழில்ல இருந்து விலகி தனித்து செயல்படவும் வாய்ப்பு உண்டுங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு நிலைக்கும்க. இரவுப் பயணத்துல இடைவழி உணவை தவிருங்க. திடீர் சுளுக்கு, தொண்டை உபாதைகள் வரலாம்க. புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு ஞாயிற்றுக் கிழமைகள்ல சென்று வணங்குங்க. வாழ்க்கை பிரகாசிக்கும்.
கும்பம்:
உயர்வுகள் வரக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல உங்க பெருமை பேசப்படும்க. எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்க. பணவரவு சீராகும்க. குடும்பத்துல குதூகலம் இடம்பிடிக்கும்க. குழந்தைகள் வாழ்க்கைல தடைகள் நீங்கும்க. தம்பதிகளிடம் அன்யோன்யம் ஏற்படும்க. வழக்குகள் ஜெயமாகும்க. செய்யும் தொழில்ல செழிப்பு உருவாகும்க. பிறமொழி மனிதர்களிடம் எச்சரிக்கையா இருங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க கையெழுத்திடும் சமயங்கள்ல கவனமா இருங்க. வாகனத்துல செல்லும்போது கவனச் சிதறல் கூடாதுங்க. காய்ச்சல், பூச்சிக்கடி ஏற்படலாம்க. செவ்வாய்க் கிழமைகள்ல துர்க்கையை வணங்குங்க. செழிப்பு நிலைக்கும்.
மீனம்:
முயற்சிகளால் முன்னேற வேண்டிய காலகட்டம்க. அலுவலகப் பொறுப்புகள்ல 5 முழுமையான கவனம் அவசியம்க. சிலருக்கு முதல் முறையாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்க. இல்லத்துல மகிழ்ச்சி நிறையும்க. விலகி இருந்த உறவும் நட்பும் மீண்டும் வரும்க. பூர்வீக சொத்துல விட்டுக் கொடுத்துப் போறதுதான் நல்லதுங்க. வீடு,மனை, வாகனம் சேரும்க. வர்த்தகத்துல வளர்ச்சி ஏற்படும்க. வெளிநாட்டு வாணிபம் ஆதாயம் தரும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க பொது இடங்கள்ல வார்த்தைகள்ல கவனமா இருங்க. இரவுப் பயணத்துல அலட்சியம் தவிருங்க. ரத்த அழுத்தம், சர்க்கரை உபாதைகள் வரலாம்க.. சனிக்கிழமைகள்ல பைரவரை வணங்குங்க. வாழ்க்கை பசுமையாகும்.