பீகார் மாநிலம் ஷிவான் மாவட்டத்தில் இன்று காலை 8.02 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானது என்றும் இது ரிக்டர் அளவு கோலில் 4.0 ஆகப் பதிவாகி இருக்கிறது என்றும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
நிலநடுக்கத்தால் குடியிருப்புகள் குலுங்குவதை உணர்ந்த மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் சேதமோ, பாதிப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 5.36 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்: எச்சரிக்கையாக இருக்க பொதுமக்களுக்கு மோடி அறிவுறுத்தல்
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானது என்றும் இது ரிக்டர் அளவு கோலில் 4.0 ஆகப் பதிவாகி இருக்கிறது என்றும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் கட்டிடங்கள் குலுங்குவதை உணர்ந்து பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளில் கட்டடங்கள், மின்விளக்குகள், வீடுகள் குலுங்கும் காட்சி பாதிவாகிய நிலையில் அது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும், மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் படிக்க: மகா கும்பமேளா 2025: பக்தர்கள் கார் மீது பேருந்து மோதி விபத்து.. 10 பேர் உயிரிழப்பு
டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அனைவரும் பாதுகாப்பாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். டெல்லியில் வரும் நாட்களில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.