சென்னை: சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதன் முதல் மாநில மாநாடு, வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டுத் தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 3 சிறப்புக் குழுக்களை நியமித்துள்ளார் தவெக தலைவர் விஜய். இது தொடர்பாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளன.
அதில், நம் கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்படி, நமது மாநில மாநாட்டின் பணிகளை மேற்கொள்ள, தொழில்நுட்பப் பணிகள், பாதுகாப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் குழு. தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்புக் குழு, காணொளிக் கண்காட்சி அமைப்புக் குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பப் பணிகள், பாதுகாப்புப் பணிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமை நிர்வாகிகள் இருவரும் அடங்கிய சிறப்புப் பிரிவு. மாநாட்டில் தலைவரின் பிரத்யேகப் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள தனியார் பாதுகாவல் படையினரை மேற்பார்வை செய்வர். இத்தனியார் பதுகாப்புப் படை, காவல்துறை வழங்கியுள்ள நெறிமுறைகளை உள்ளடக்கித் தங்கள் பணிகளை மேற்கொள்வர்.
மேலும் இந்தக் குழுவின் தலைமை நிர்வாகிகள். முழு மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் வழிகாட்டுதலின்படி, தனியார் பாதுகாவல் படையின் உதவியுடன் வழிகாட்டும் குழு. பாதுகாப்புக் குழு, போக்குவரத்துக் குழு. வாகன நிறுத்தக் குழு. கண்காணிப்பு, கட்டுப்பாட்டு அறை. சீருடை அணிந்த தன்னார்வலர்கள் குழுக்கள் பலவற்றையும் ஒருங்கிணைத்து, அவற்றிற்கான நெறிமுறைகளைச் செவ்வனே செயல்படுத்தும் கூடுதல் பணியினையும் ஆற்றுவர். கழகத் தலைமை நிலையச் செயலகத்தின் ஆலோசனை, வழிகாட்டுதலின்படி, நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்குத் தேவையான ஒலி, ஒளி வடிவக் காணொளிக் காட்சிக்கான (Audio Visuals) தயாரிப்புப் பணிகளையும் மேற்கொள்வர்.
இத்துடன், மாநிலம் முழுவதும் இருந்து மாநாட்டிற்கு வருகை தரும் கழகத் தோழர்கள், பொதுமக்களுக்கு உதவி புரியும் வகையில், சீருடை அணிந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட வைக்கும் பணிகளில் அதற்கெனத் தனியாக அமைக்கப்பட்டிருக்கும் 'தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்புக் குழு ஈடுபடும். காணொளிக் கண்காட்சி (Video Exhibition) அமைப்புக் குழுவானது. தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியாகப் பரிணாமம் அடைவதற்கு முன்பு. ரசிகர் மன்றமாக இருந்து நற்பணி மன்றமாகி, பின்னர் தளபதி மக்கள் இயக்கமாக வளர்ந்து பல்லாண்டுகளாகத் தமிழக மக்களுக்கு உறுதுணையாக நின்று ஆற்றிய பல்வேறு நலத்திட்டப் பணிகள் குறித்த காணொளிக் கண்காட்சி அமைப்பதற்கான பணிகளைக் கவனிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
#தமிழக_வெற்றிக்_கழகம்
— TVK Party Updates (@TVKHQUpdates) October 14, 2024
மாநாட்டுச் சிறப்புக் குழுக்கள்#தவெக_மாநாடு#TVKVijay@tvkvijayhq @BussyAnand pic.twitter.com/09GzC86B0j