இந்தியா

அசாமில் 9,000 பெண்கள் பிஹூ நடனம்... பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

அசாமில் தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு 9 ஆயிரம் பெண்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அசாம் 2.0-வை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

அசாமில் 9,000 பெண்கள் பிஹூ நடனம்...  பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
அசாமில் 9,000 பெண்கள் பிஹூ நடனம்... பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

அசாம் மாநிலம் கவுகாத்தில் தேயிலைத் தோட்ட தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த தேயிலை தோட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. இதன் 200-வது ஆண்டு விழாவை கோலாகலாமக கொண்டாட திட்டமிட்டப்பது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அசாம் வந்தடைந்தார். தொடர்ந்து கவுகாத்தில் நடந்த ரோட் ஷோவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதையடுத்து கவுகாத்தியில் உள்ள சருசஜாய் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  பிரதமர் மோடி விழா மேடை நோக்கி வந்தபோது 9 ஆயிரம் பெண்கள் அசாமின் பாரம்பரிய பிஹூ நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். நடன அசைவுகளுடன் வரவேற்பு அளித்தனர். பிரமாண்டமாக நடந்த இந்நிகழ்ச்சியில் அரங்கம் அதிரும் வகையில், நடன கலைஞர்களை சுற்றி இசை வாத்தியங்கள் முழங்கியபடியே நடனமாடி அசத்தினர். இதில் அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.

அனைவரையும் உள்ளடக்கிய, ஒற்றுமை மற்றும் கலாசார பெருமை மற்றும் அசாமின் ஒருங்கிணைந்த கலாசார கலவையின் அடையாளம் ஆகியவற்றிற்கான எடுத்துக்காட்டாக இந்த நடனம் அமைந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, கூடியிருந்த மக்களை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி, அசைத்து அவர்களுக்கு வாழ்த்து கூறினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பாரம்பரிய மேளத்தை அடித்து நடன கலைஞர்களை உற்சாகப்படுத்தினார்.  பிரதமர் மோடி, அசாம் 2.0-வை இன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்த பெரிய அளவிலான உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான உச்சி மாநாட்டில், பல்வேறு மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், தலைவர்கள் மற்றும் தூதர்கள் கலந்து கொள்கின்றனர்.