Vivo Y18i Launch in India : இந்தியாவில் களமிறங்கிய விவோ ஒய்18ஐ... இதோட விலையை கேட்டால் மிரண்டு போயிருவீங்க!

Vivo Y18i Smartphone Launch in India : பட்ஜெட் ஃப்ரெண்ட்லி ஸ்மார்ட் போனை வாங்க நினைக்கும் நபர்களுக்காகவே புதிய Vivo Y18i, இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

Aug 26, 2024 - 13:04
Aug 26, 2024 - 22:41
 0
Vivo Y18i Launch in India : இந்தியாவில் களமிறங்கிய விவோ ஒய்18ஐ... இதோட விலையை கேட்டால் மிரண்டு போயிருவீங்க!
இந்தியாவில் களமிறங்கிய Vivo Y18i

Vivo Y18i Smartphone Launch in India : பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான Vivo தனது புதிய மாடலான Vivo Y18i -ஐ கடந்த 24ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Android 14 தொழில்நுட்பம் கொண்ட இந்த போனில் Unisoc T612 chipset வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் போனில் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்கள் மற்றும் அதன் விலை குறித்து கீழே பார்க்கலாம். 

Vivo Y18i அம்சங்கள்: 

Android 14 தொழில்நுட்பம் கொண்ட இந்த ஸ்மார்ட் போன் டூயல் சிம் (Nano+Nano) அம்சம் பெற்றுள்ளது. 6.56 இன்ச் HD+ (720x1,612 பிக்சல்ஸ்) LCD டிஸ்பிளே கொண்டுள்ள இதில் 60Hz - 90Hz refresh rate கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பிரைட்னெஸ் 528 நிட்ஸ் அளவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் இந்த ஸ்மார்ட் போனில் 12nm octa-core Unisoc T612 சிப் செட்டும் இடம்பெற்றுள்ளது. 

இதன் கேமராக்களை எடுத்துக்கொண்டால், பிரைமரி கேமரா 13 மெகா பிக்ஸலும் (f/2.2 aperture) , செகண்டரி கேமரா 0.08 மெகாபிக்ஸலும் (f/3.0) கொடுக்கப்பட்டுள்ளது. 5 மெகா பிக்ஸல் கொண்ட முன் கேமராவை கொண்டு மிகவும் துல்லியமான புகைப்படங்கள் எடுக்கவும் மற்றும் வீடியோ கால்களை பேசவும் முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

64 GB ஸ்டோரேஜுடன் வரக்கூடிய இந்த போனில்  MicroSD கார்டு மூலம் இந்த ஸ்டோரேஜை 1TB வரை அதிகரித்துக்கொள்ளலாம். Wi-Fi 5, Bluetooth 5. GPS மற்றும் USB Type-C போர்ட் உள்ளிட்ட அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. 

இந்த Vivo Y18i போனில், 5,000mAh பேட்டரி பவர் உள்ளது. 163.63 x 75.58 x 8.39 மிமீ அளவும் 185 கிராம் எடையும் உள்ள இந்த ஸ்மார்ட் போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டெண்ட் அம்சங்களைப் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க: பாக். அணிக்கு கண்ணீர் அஞ்சலி... போஸ்டர் ஒட்டாத குறையாக கலாய்க்கும் ரசிகர்கள்..

Vivo Y18i விலை: 

இந்திய சந்தையில் கடந்த 24ம் தேதி அறிமுகமான இந்த புதிய Vivo Y18i ஸ்மார்ட் போன் வெறும் ரூ. 7,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜெம் கிரீன் மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் வரும் இந்த போனை Vivo-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், அமேசான், பிளிப் கார்ட் ஆகிய ஆன்லைன் ஷாப்பிங் தளத்திலும் வாங்கிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow