Kolkata Doctor Rape Murder Case : மருத்துவ மாணவி கொலை... மேற்குவங்கத்தில் தீப்பந்தம் ஏந்தி பேரணி... போராட்டக் களத்தில் நுழைந்த கும்பல்

Kolkata Doctor Rape Murder Case : கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற பேரணியில், மர்ம கும்பல் நுழைந்ததால் போராட்டக் களம் வன்முறையாக மாறியது. மருத்துவமனை அறை, காவல்துறை வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Aug 15, 2024 - 11:33
Aug 15, 2024 - 12:18
 0
Kolkata Doctor Rape Murder Case : மருத்துவ மாணவி கொலை... மேற்குவங்கத்தில் தீப்பந்தம் ஏந்தி பேரணி... போராட்டக் களத்தில் நுழைந்த கும்பல்
கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தில் வன்முறை

Kolkata Doctor Rape Murder Case : மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தை கண்டித்து மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆர்.ஜி. கர் மருத்துவமனை முன்பு போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, அங்கு மர்ம கும்பல் ஒன்று உள்ளே நுழைந்தது. 

மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த அந்த கும்பல், திடீரென பேரிகார்டை உடைத்து போராட்ட களத்திற்குள்  நுழைந்ததாக தெரிகிறது. அதோடு அங்கிருந்த காவல்துறை வாகனங்கள், மருத்துவமனை அறை உள்ளிட்டவைகளை அக்கும்பல் அடித்து நொறுக்கியது. லாரியில் வந்த சுமார் 35 இளைஞர்கள் மருத்துவமனையின் அவசர சிகிக்சை பகுதியை அடித்து நொறுக்கினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கூடாரமும் அடித்து உடைத்து சூறையாடப்பட்டது. வன்முறையில் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், அடையாளம் தெரியாத மர்ம கும்பல் மீதும் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். 

ஆனால், போராட்ட களத்தில் நுழைந்த கும்பலைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போராட்டத்தைக் கலைப்பதற்காக மர்ம கும்பல் வன்முறையை நிகழ்த்தியதா?  எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மருத்துவ மாணவி படுகொலை செய்யப்பட்ட, கொல்கத்தா(Kolkata Doctor) ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மர்ம நபர்களால் சூறையடப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை(Kolkata Doctors Protest) திசை திருப்ப வன்முறை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த வன்முறை சம்பவம் குறித்து மேற்குவங்க போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக நேற்று கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலை(Kolkata Doctor Rape Murder Case) தொடர்பாக RG Kar மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனை ஊழியர்களிடமும், சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பெண் பயிற்சி மருத்துவரை படுகொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார். பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் மாநில அரசு அனைத்து நடவடிக்கைகள் எடுத்த போதிலும், எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்தார்.  

மேலும் படிக்க - செங்கோட்டையில் 11வது முறையாக தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி!

கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு, சிபிஐக்கு அனைத்து ஆதரவையும் வழங்கி வருவதாகவும், இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பதில் தங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பெண் பயிற்சி மருத்துவரை படுகொலை(Kolkata Doctor Rape Murder Case) செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதேபோல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பாதிக்கப்படுவதால் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow