Aadhaar Card Update : 10 வருஷம் ஆச்சு..... ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கியுள்ள மத்திய அரசு!
Aadhaar Card Free Update Date Extended Till September 14 : ஆன்லைனில் இலவசமாக ஆதார் அட்டைகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 14ம் தேதி வரை மத்திய அரசு அறிவித்துள்ளது.
Aadhaar Card Free Update Date Extended Till September 14 : நாம் இந்த நாட்டின் குடிமகன் என்ற அடையாளத்திற்கு ஆதாரமாக விளங்குவது ஆதார் அட்டை. அரசின் பல சேவைகளைப் பெறுவதற்கும், மேலும் அடையாளம் சார்ந்த பல விஷயங்களுக்கும் ஆதார் அட்டை முக்கியமானதாக உள்ளது.
நமது ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துவிட்டது. எனவே அதனை தற்போது புதுப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த முக்கிய அறிவிப்பை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி உங்களது ஆதார் அட்டையை ஆன்லைன் மூலம் சுலமாகவே கட்டணமின்றி புதுப்பித்துக்கொள்ள முடியும். இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் புதுப்பிக்க முடியாத நபர்கள் ஆதார் பதியும் மையங்களுக்கு சென்றும் புதுப்பிக்க முடியும். ஆனால் அதற்கு ரூ. 50 கட்டணமாக செலுத்த வேண்டியது இருக்கும்.
ஆன்லைனில் ஆதார் அட்டையை புதுப்பிப்பது எப்படி?
1. முதலில் https: //myaadhaar.uidai.gov.in/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் பெறப்பட்ட ஆதார் நம்பர் மற்றும் OTP-ஐப் பயன்படுத்தி உள்நுழையவும்.
2. உங்களது Profile-ல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை நன்றாக சரி பார்க்கவும்.
3. உங்களது விவரங்கள் சரியானதாக இருந்தால், “I verify that the above details are correct” என்பதை கிளிக் செய்யவும். அப்படி இல்லை என்றால் அடுத்த ஸ்டெப்புக்கு செல்லவும்.
4. உங்களது விவரங்களில் ஏதேனும் மாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மெனுவில் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை கிளிக் செய்யுங்கள்.
5. இதையடுத்து உங்கள் அடையாள ஆவணத்தைப் பதிவேற்றவும். அனால் அதன் அளவு 2 MB-க்கும் குறைவாக இருக்க வேண்டும். நீங்கள் பதிவேற்றும் ஃபார்மேட் JPEG, PNG அல்லது PDF ஆகியவற்றில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
6. ஆதாரி அட்டையில் உங்களது முகவரியை மாற்ற விரும்பினால், கீழே இருக்கும் மெனுவிலிருந்து முகவரி ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, பின்பு உங்களது முகவரி ஆவணத்தை பதிவேற்றவும்.
எதற்கு ஆதார் பதிவு மையங்களுக்கு செல்ல வேண்டும்?
உங்களது ஆதார் அட்டையில் பெயர், பாலினம் அல்லது பிறந்த தேதியை மாற்ற விரும்பினால் அதனை ஆன்லைனில் செய்ய முடியாது. இதற்கு ஆதார் பதிவு மையங்களுக்குதான் செல்ல வேண்டும். அடையாள திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு இது போன்ற முக்கிய விவரங்களை ஆன்லைனில் மாற்றம் செய்ய முடியாது.
மேலும் படிக்க: Redmi Buds 5C Earbuds.... பிரபல நிறுவனங்களுக்கு வெயிட்டான போட்டியாக நிற்கும் ரெட்மி!
ஆன்லைனில் புதுப்பிக்கும் நபர்களும் செப்ரம்பர் 14 வரை மட்டுமே இலவசமாக பதிவு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?