Assembly Elections 2024 : ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்து 1 மணி நேரத்தில் நீக்கிய பாஜக.. புது பட்டியல் வெளியீடு!
Jammu & Kashmir Assembly Elections 2024 : ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக செப்டம்பர் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 2ம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்டமாக அக்டோபர் 1ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Jammu & Kashmir Assembly Elections 2024 : இந்தியாவின் மிக அழகிய மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் அடுத்த மாதம் ( செப்டம்பர்) சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்குள்ள உள்ள 90 தொகுதிகளில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். அதாவது ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக செப்டம்பர் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 2ம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்டமாக அக்டோபர் 1ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு முதன்முறையாக அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்படுகின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு அங்கு தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முஃப்தி தலைமையிலான ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை பிரதான கட்சிகளான உள்ளன. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் தற்போது வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் போட்டியிடும் 44 பெயர்கள் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை முதற்கட்டமாக வெளியிட்டது.
ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த பட்டியலை திரும்ப பெற்ற பாஜக, முதற்கட்ட தேர்தலில் 15 பேர் கொண்ட புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக முதலில் வெளியிட்ட பட்டியலில் ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, முன்னாள் துணை முதல்வர்கள் நிர்மல் சிங் மற்றும் கவிந்தர் குப்தா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
ஆனால் திருத்தப்பட்ட 15 பேர் கொண்ட பட்டியலில் இந்த மூன்று பேரின் பெயர்களும் இடம்பெறவில்லை. அதே வேளையில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரசில் இருந்து பாஜகவில் இருந்து இணைந்த பலரது பெயர்கள் 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பாஜக முதலில் 44 பெயர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதை நீக்கம் செய்தது ஏன்? என்பது தெரியவில்லை.
44 பெயர்கள் அடங்கிய பட்டியலில் பல்வேறு மூத்த நிர்வாகிகளின் பெயர் இடம்பெறவில்லை எனவும் இதனால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பட்டியலை பாஜக நீக்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
What's Your Reaction?