வானில் தோன்றவுள்ள ’ரிங் ஆஃப் பயர்’.. உடல்நலத்துக்கு பாதிப்புகள் ஏற்படுமா?

2024ம் ஆண்டிற்கான 2வது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 2ம் தேதி (நாளை) தோன்றவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை எங்கு காணலாம், எப்போது காணலாம், மனித உடலுக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

Oct 1, 2024 - 21:47
 0
வானில் தோன்றவுள்ள ’ரிங் ஆஃப் பயர்’.. உடல்நலத்துக்கு பாதிப்புகள் ஏற்படுமா?

2024ம் ஆண்டிற்கான 2வது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 2ம் தேதி (நாளை) தோன்றவுள்ளது. இந்த சூரிய கிரகணம் ‘ரிங் ஆஃப் பயர்’ என அழைக்கப்படுகிறது. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலா வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதை பூமியில் இருந்து பார்க்கும்போது, சூரியனுக்கு முன் சென்று நிலா அதனை மறைக்கிறது. ஆனால், சூரியனை முழுமையாக மறைக்கமுடியாததால் நமக்கு அது நெருப்பு வளையம் போல காட்சியளிக்கிறது.

எப்போது தோன்றும்?

இந்த ஆண்டுக்கான சூர்ய கிரகணம் இந்திய நேரப்படி அக்டோபர் 2ம் தேதி இரவு 9.13 மணியளவில் தொடங்கி அக்டோபர் 3ம் தேதி நள்ளிரவு 3.17 மணியளவில் முடிவடைகிறது. நெருப்பு வளையம் நள்ளிரவு 12.15 மணிக்கு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எங்கு காணலாம்?

 தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை காண முடியுமாம். மேலும் வட அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக், அண்டார்டிக்கா பகுதிகளில் சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இரவு நேரத்தில் இந்த சூரிய கிரகணம் ஏற்படுவதால் இதனை காண முடியாது என சொல்லப்பட்டிருக்கிறது.

சூரிய கிரகணத்தால் பாதிப்புகள் ஏற்படுமா?

கிரகணங்களை பற்றி பல கற்பனைகள் சிலரிடம் உண்டு. கிரகண நேரத்தில் வெளியே நடமாடக்கூடாது, சாப்பிடக்கூடாது, வானத்தை பார்க்கக்கூடாது என்றெல்லாம் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கிரகணத்தை பற்றி விஞ்ஞான உலகின் ஆய்வு வேறு விஷயங்களை சொல்கிறது. கிரகணங்களால் நம் உடல்நலனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அறிவியல் சொல்கிறது. 

முக்கியமாக கிரகணத்தின் போது, சூரியனில் இருந்து வெளியேறும் புற ஊதாக்கதிர்களால் உடல்நலம் பாதிக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், எப்போதும் தான் சூரியனில் இருந்து புற ஊதாக்கதிர்கள் வெளியாகும் என அறிவியல் கூறுகிறது.

மேலும் சூரிய கிரகணத்தால் முதுகு வலி, தலைவலை, செரிமாண கோளாறு, தோல் பிரச்சனை அக்கியவை ஏற்படும் என நம்பப்படுகிறது. ஆனால் இவையெல்லாம் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

மேலும் படிக்க: சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல்நலம்.. அப்பலோ மருத்துவமனை கொடுத்த அப்டேட்!

கண் பாதிப்பு ஏற்படுமா?

கிரகணம் என்றாலே அது கண்பார்வையுடன் பல ஆண்டு காலமாக தொடர்புப்படுததப்பட்டு வருகிறது. கிரகணத்தை பார்த்தால் கண்களுக்கு கேடு என்ற நம்பிக்கை உண்டு. ஆனால், கிரகண நேரம் மட்டும் அல்ல. எப்போதுமே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாதாம். சூரியன் மட்டுமல்ல, வெல்டிங் வெளிச்சம், குண்டு பல்பின் வெளிச்சம் போன்ற பிரகாசமான ஒளியை எப்போதும் வெறும் கண்ணால் அதிக நேரம் பார்க்கக்கூடாது. பிரகாசமான ஒளியை உற்றுப் பார்க்கும்போது நம் கண்களில் உள்ள நிறமி பாதிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow