634 நாட்களுக்குப் பிறகு களத்தில் ‘ஸ்டார்’ பிளேயர் - வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் 634 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார்.

Sep 7, 2024 - 14:54
Sep 7, 2024 - 15:02
 0
634 நாட்களுக்குப் பிறகு களத்தில் ‘ஸ்டார்’ பிளேயர் - வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணி
634 நாட்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பும் ரிஷப் பண்ட்

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி 23ஆம் தேதி வரையிலும், 2ஆவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

இந்திய அணி கடைசியாக, 2024 மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று இருந்தது. தொடர்ந்து டி20 உலகக்கோப்பை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர்களை இந்திய அணி கைப்பற்றிய உற்சாகத்தோடு உள்ளது.

அதே சமயம் வங்கதேச அணியோ, சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் எதிரான டெஸ்ட் தொடரை, பாகிஸ்தான் மண்ணிலேயே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருந்தது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 45.83 சதவிகத்துடன் 4ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், அடுத்த வாரம் இந்திய கிரிக்கெட் வாரியம், வங்கேதேசத்திற்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணியை அறிவிக்கவுள்ளது. கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் என்பதால், இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, துலீப் டிராபி போட்டிகள் நடைபெற்று வருவதால், அதில் சிறப்பாக ஆடும் வீரர்கள் சிலருக்கு வாய்ப்புகள் வழங்கலாம் என்று ஆலோசிக்கப்படுவதாக பிசிசிஐ-க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகு, விராட் கோலி டெஸ்ட் அணிக்கு திரும்பவுள்ளார்.

அதே சமயம், தொடக்க ஜோடியாக, ரோஹித் சர்மாவுடன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறக்கப்பட உள்ளதாக தெரிகிறது. போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளதால் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்‌ஷர் பட்டேல் என மூன்று ஸ்பின்னர் ஆல்-ரவுண்டர்களை களமிறக்க முடிவு செய்யப்படுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

முக்கியமாக விபத்தால் காயமடைந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப உள்ளார். 634 நாட்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2024 தொடரிலும், டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்று சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார்.

வங்கதேச தொடருக்கான உத்தேச அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சர்ஃப்ராஸ் கான், தேவ்தத் படிக்கல், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், குல்தீப் யாதவ், மொஹமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்/அர்ஷதீப் சிங்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow