வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி.. ஓடோடி சென்ற தங்க மங்கை..

ஒலிம்பிக் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வினேஷ்போகத்தை, இந்தியத் தடகள விளையாட்டு வீராங்கனையும் பி.டி. உஷா நேரில் சந்தித்து உரையாடினார்.

Aug 7, 2024 - 20:17
Sep 11, 2024 - 19:59
 0
வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி.. ஓடோடி சென்ற தங்க மங்கை..
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வினேஷ் போகத்தை நேரில் சந்தித்தார் பிடி உஷா

பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்துள்ளது. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியாவில் இருந்து மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. 

துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கத்தையும்  தாய்நாட்டுக்காக வென்று கொடுத்தார். இதேபோல் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதிச்சுற்று போட்டியில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அசத்தினார்.

ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் கியூபா நாட்டைச் சேர்ந்த குஸ்மான் லோப்ஸுடன் மோதினர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் குஸ்மான் லோப்ஸை வீழ்த்தி அபார வெறி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.

50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டி முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார். இந்திய நேரப்படி இன்று இரவு 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க இருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவருக்கு தங்கம் கிடைக்கும். தோற்றாலும் வெள்ளி கிடைக்கும் என்ற பதக்க வாய்ப்பு அவருக்கு உருவாகி இருந்தது.

இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இருந்து வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத்,100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்துள்ளது.

இறுதிப்போட்டிக்கு முன்பாக 2 கிலோ எடை அதிகரித்து இருந்ததை, வினேஷ் போகத் அறிந்து கொண்டார். இதனால் அவர் உணவு உண்ணாமல், இரவு முழுக்க அதிதீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். தீவிர உடற்பயிற்சியின் மூலம் ஒரே இரவில் 1.9 கிலோ எடையை குறைத்துள்ளார். முடிவில், 100 கிராம் எடையை குறைக்க முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதோடு, இரவு முழுவதும் உடற்பயிற்சி மேற்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினித் போகத்தை, தடகள வீராங்கனையும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும் உள்ள பி.டி. உஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.உஷா, “நான் சிறிது நேரத்திற்கு முன்பு ஒலிம்பிக் வில்லேஜ் பாலிகிளினிக்கில் வினேஷ் போகத்தை சந்தித்தேன். இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய அரசு மற்றும் நாட்டினதும் முழுமையான ஆதரவை அவருக்கு உறுதியளித்தேன்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் வினேஷுக்கு அனைத்து மருத்துவ மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவையும் வழங்கி வருகிறோம். வினேஷை தகுதி நீக்கம் செய்வதற்கான முடிவை பரிசீலிக்க உலக மல்யுத்த ஐக்கியத்திற்கு, இந்திய மல்யுத்த சம்மேளனம் மேல்முறையீடு செய்துள்ளது. தவிர, வலுவான சாத்தியக்கூறுகளை நாங்கள் பின் தொடர்ந்து வருகிறோம். இரவு முழுவதும் வினேஷின் மருத்துவக் குழுவினர் மேற்கொண்ட அயராத முயற்சி எனக்கு தெரியும்” என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow