NIRF Ranking 2024 : தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியல் 2024; தொடர்ந்து சென்னை ஐஐடி முதலிடம்

Chennai IIT First in NIRF Ranking 2024 List : மத்திய அரசு இன்று (ஆகஸ்ட் 12) வெளியிட்ட தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியல் 2024-ல் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.

Aug 12, 2024 - 17:31
Aug 13, 2024 - 09:36
 0
NIRF Ranking 2024 : தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியல் 2024; தொடர்ந்து சென்னை ஐஐடி முதலிடம்
தொடர்ந்து சென்னை ஐஐடி முதலிடம்

Chennai IIT First in NIRF Ranking 2024 List : நாட்டில் உள்ள தலைசிறந்த கல்வி நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கம். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பொறியியல், ஃபார்மஸி, மேனேஜ்மெண்ட், சட்டம் மற்றும் கட்டடக்கலை உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில் பொறியியல், மேலாண்மை, மருந்தகம், மருத்துவம், சட்டம், பல் மருத்துவம், விவசாயம் மற்றும் பலவற்றிற்கான நடப்பாண்டிற்கான NIRF தரவரிசை பட்டியல் இன்று (ஆகஸ்ட் 12) வெளியாகியுள்ளது. இந்த தரவரிசையில் முன்னிலை இடங்களை பெற்ற கல்வி நிலையங்களுக்கு டெல்லியில்  நடைபெற்ற  விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

ஆரோக்கியமான போட்டி, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்துதல், உயர்கல்வியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவையை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு ஆண்டுதோறும் இத்தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்ட சிறந்த கல்வி நிறுவனத்திற்கான பட்டியலில் ஒட்டுமொத்த பிரிவில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடத்தை பிடித்துள்ளது. மும்பை ஐஐடி 3வது இடமும், டெல்லி ஐஐடி 4வது இடமும், கான்பூர் ஐஐடி 5வது இடமும் பிடித்துள்ளன. இந்தியாவில் 2024க்கான தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

இதையடுத்து 2024 ஆம் ஆண்டின் சிறந்த கல்லூரிகள் பட்டியலில் சென்னை லயோலா கல்லூரி 8 ஆம் இடம் பிடித்துள்ளது. கோவை PSGR கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 7 ஆம் இடம் பிடித்துள்ளது. முதல் 10 இடங்களில் 6 இடங்களை டெல்லியில் உள்ள கல்லூரிகள் பெற்றுள்ளன. 

இதைத்தொடர்ந்து சிறந்த மாநில பல்கலைக்கழகத்திற்கான பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் பட்டியலில் கோவையை சேர்ந்த அமிர்தா வித்யா பீடம் பல்கலைக்கழகம் ஏழாவது இடத்தையும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 8வது இடத்தையும், வேலூர் விஐடி பல்கலைக்கழகம் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. 

மேலும் படிக்க: Apple iPhone SE 4; ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் உடன் களமிறங்கும் புதிய மாடல்!

சிறந்த பல் மருத்துவக் கல்லூரி பிரிவில் இந்திய அளவில் சென்னையில் உள்ள சவிதா பல் மருத்துவக் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. 

இந்திய அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூன்றாம் இடத்தில் இருந்த சென்னை மாநிலக் கல்லூரி இந்த ஆண்டு தரவரிசையில் முதல் 10 இடங்களில் இடம்பெறாதது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow