பட்டியலை தொடங்கியது இந்தியா.. துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்று சாதனை

Manu Bhaker Wins Bronze Medal in Paris Olympics 2024 : 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Jul 28, 2024 - 22:27
Jul 29, 2024 - 15:27
 0
பட்டியலை தொடங்கியது இந்தியா.. துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்று சாதனை
Manu Bhaker Wins Bronze Medal in Paris Olympics 2024

Manu Bhaker Wins Bronze Medal in Paris Olympics 2024 : 33-வது ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியா 3 தங்கம், 2 வெள்ளி என 5 பதக்கங்களுடன் முதலிடத்திலும், 3 தங்கம் ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களுடன் இடண்டாம் இடத்திலும், தென் கொரியா 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு 5 பதக்கங்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் [Manu Bhaker] பங்கேற்றார். 8 பேர் பங்கேற்ற இந்த போட்டியில், முதல் 5 ஷாட்களுக்கு பின்னர் மனு பாக்கர் 2வது இடத்திற்கு முன்னேறினார்.

இதனைத் தொடர்ந்து 10 ஷாட்களுக்கு பின் மனு பாக்கர் 3வது இடத்தில் இருந்தார். 10 ஷாட்களுக்கு பின் ஒவ்வொரு வீராங்கனைகளாக வெளியேற தொடங்கினர். 15 ஷாட்களுக்கு பின்னரும் மனு பாக்கர் 150.7 புள்ளிகளுடன் 3வது இடத்தில் தொடர்ந்து வந்தார்.

கடைசி 5 வீராங்கனைகள் மட்டுமே போட்டியில் இருந்த நிலையில், சீனாவின் லி சூ வெளியேறினார். இதன்பின் கடைசி 4 வீராங்கனைகளுக்கான போட்டியாக உருவாகியது. மற்றொரு சீனா வீராங்கனையும் வெளியேறிய நிலையில், இந்தியாவின் மனு பாக்கருக்கு பதக்கம் உறுதியானது.

இறுதியில், 221.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமை பெற்றார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஒரு பதக்கத்தைப் பெற்று பதக்கப்பட்டியலில் இந்தியா 17-வது இடத்தில் உள்ளது.

அதேபோல, ஆடவர் ஒற்றையர் தகுதிச் சுற்று 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் 630.1 புள்ளிகளுடன் 7வது இடத்தை பிடித்து, இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் பதக்கங்கள்:

2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் : ராஜ்யவர்தன் சிங் [வெள்ளிப் பதக்கம்]
2008 பெய்ஜிங் ஒலிம்பிக் : அபினவ் பிந்த்ரா [தங்கம்]
2012 லண்டன் ஒலிம்பிக் : விஜய்குமார் [வெள்ளிப் பதக்கம்]
2012 லண்டன் ஒலிம்பிக் : ககன் நரங் [வெண்கலப் பதக்கம்]
2024 பாரிஸ் ஒலிம்பிக் : மனு பாக்கர் [வெண்கலப் பதக்கம்]

ஒலிம்பிக் வரலாற்றில், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறை, மனு பாக்கர் படைத்துள்ளார். அதேபோல, பாரிஸ் ஒலிம்பிக்-2024இல் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow