3வது தங்கத்தை அறுவடை செய்த இந்தியா.. தமிழக வீராங்கனையும் அசத்தல்!

பாராலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது. அதாவது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 70.59 மீட்டர் ஈட்டி எறிந்த சுமித் அன்டில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இவர் ஏற்கெனவே 2020 டோக்கியோ பாராலிம்பிக் தங்கம் வென்றிருந்தார். தற்போது தொடர்ந்து 2வது முறையாக தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

Sep 3, 2024 - 10:49
Sep 4, 2024 - 10:10
 0
3வது தங்கத்தை அறுவடை செய்த இந்தியா.. தமிழக வீராங்கனையும் அசத்தல்!
Paralympics 2024

பாரீஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 84 வீரர்கள், 12 விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொண்டுள்ள நிலையில், தொடக்கம் முதலே நமது வீரர்கள் பதக்கங்கங்களை வேட்டையாடி வருகின்றனர். 

பாராலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தவர் இந்தியா வீராங்கனை அவானி லெகாரா. இவர் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். அடுத்ததாக 2வது தங்கத்தை இந்திய பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார் தட்டித் தூக்கினார். ஆண்கள் ஒற்றையர் SL3 பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த டேனியல் பெத்தேலை வீழ்த்திய அவர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்நிலையில், பாராலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது. அதாவது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 70.59 மீட்டர் ஈட்டி எறிந்த சுமித் அன்டில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இவர் ஏற்கெனவே 2020 டோக்கியோ பாராலிம்பிக் தங்கம் வென்றிருந்தார். தற்போது தொடர்ந்து 2வது முறையாக தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

இதேபோல் பாராலிம்பிக்கில் அசத்திய தமிழ்நாடு வீராங்கனை பேட்மிண்டன் போட்டியில் நித்யஸ்ரீ வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அதாவது இந்தோனேசியாவின் ரினா மார்லினாவை 21-14, 21-6 என்ற கணக்கில் வீழ்த்திய நித்யஸ்ரீ பதக்கத்தை உச்சி முகர்ந்துள்ளார். நடப்பு பாராலிம்பிக்கில் தமிழ்நாடு வீராங்கனைகள் தொடர்ந்து சாதித்து வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் SU5பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சியா குய் யாங்விடம் 17-21, 10-21 என்ற கணக்கில் தோல்வியை தழுவிய துளசிமதி முருகேசன் வெள்ளி வென்றார். இதேபோல் தமிழ்நாடு வீராங்கனை மனிஷா ராமதாஸ், மூன்றாவது இடத்திற்கான பேட்மிண்டன் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கேத்ரின் ரோசன்கிரெனை 21-12, 21-8 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 

பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை அறுவடை செய்து 15வது இடத்தில் அமர்ந்துள்ளது. 43 தங்கம், 30 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 87 பதக்கங்களை வேட்டையாடிய சீனா முதலிடத்தில் உள்ளது. 29 தங்கம் 15 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 54 பதக்கங்களை கைப்பற்றிய இங்கிலாந்து 2வது இடம் பிடித்துள்ளது.13 தங்கம், 19 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 42 பதக்கங்களை வென்ற அமெரிக்கா 3வது இடத்தில் அமர்ந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow