இவருக்கு இத்தனை கோடியா?.. 338% அதிகம் கொடுத்து தக்கவைத்தது எஸ்.ஆர்.ஹெச்

தென் ஆப்பிரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசனை 23 ரூபாய் கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துக் கொண்டது.

Oct 17, 2024 - 03:31
Oct 17, 2024 - 03:32
 0
இவருக்கு இத்தனை கோடியா?.. 338% அதிகம் கொடுத்து தக்கவைத்தது எஸ்.ஆர்.ஹெச்
ரூ.23 கொடுத்து ஹென்ரிச் கிளாசனை தக்கவைத்துக் கொண்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஐபிஎல் 2025 (IPL 2025) ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஏலத்தில் ஆறு வீரர்களை தக்கவைத்துக்கொள்ள, இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதனால், யார், யாரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று ஹைதராபாத் அணி நிர்வாகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

நடப்பு ஆண்டு ஐபிஎல்2024 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி [SunRisers Hyderabad] இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அந்த சீசனில் பல சாதனைகளை ஹைதராபாத் அணி படைத்திருந்தது. ஒரு அணியால் அடிக்கப்பட்ட அதிகப்பட்ச சிக்ஸர்கள், ஐபிஎல் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகப்பட்ச ரன்கள், பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்கள், அதிவேக சதம், அதிவேக 150, அதிவேக 250 என பேட்டிங்கில் அதிரடி காண்பித்தது ஹைதராபாத் அணி. 

ஆனால், கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இமாலய ஸ்கோர் குவிக்கு என்று எதிர்பார்க்கப்பட்ட ஹைதராபாத் 113 ரன்களுக்குள் சுருண்டு அதிர்ச்சி அளித்தது. ஆனால், டிராவிஸ் ஹெட் [567], அபிஷேக் சர்மா [484], ஹென்ரிச் கிளாசன் [479], நிதிஷ்குமார் ரெட்டி [303] என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அசத்தினர். அதேபோல் அந்த அணியின் பவுலரும், கேப்டனுமான பேட் கம்மின்ஸ் 18 விக்கெட்டுகளையும், டி.நடராஜன் 19 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர். 

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசனை 23 கோடி ரூபாய் கொடுத்து மீண்டும் அணியில் தக்கவைத்துள்ளது ஹைதராபாத் அணி. இது கடந்த ஆண்டை விட [ரூ. 5.25 கோடி] 338 சதவீதம் அதிகம் என்பது முக்கியமானது. நடந்துமுடிந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய அணியை கலங்கடித்ததை அவ்வளவு எளிதில் கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதே சமயம் டி20 போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. அவர், கடந்த 26 போட்டிகளில் 927 ரன்கள் [ஸ்ட்ரைக் ரேட் - 174] குவித்துள்ளார்.

அடுத்ததாக, அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 18 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைக்கப்பட்டு உள்ளார். இது கடந்த ஆண்டை விட [ரூ. 20.5 கோடி] 12.2 சதவீதம் குறைவு என்றாலும், கடந்த ஆண்டு அதிக விலை கொடுத்த வாங்கப்பட்டவர் பேட் கம்மின்ஸ்தான். அவர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆகியவற்றை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் வளர்ந்துவரும் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மாவை 14 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டு உள்ளார். இது கடந்த ஆண்டை விட [ரூ. 6.5 கோடி] 115 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர்களில் [குறைந்தபட்சம் 200 பந்துகள்] 198.4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

சன்ரைசர்ஸ் அணி விரைவில் டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரை தக்கவைத்துக்கொள்ளும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் தக்கவைப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 31 என நிர்ணயித்துள்ளது பிசிசிஐ. ஏலத்தில் ஒரு அணி 120 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளதும் முக்கியமானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow