ஹைதராபாத் மாநகராட்சியின் இணை ஆணையராக பணியாற்றி வருபவர் ஜானகிராம். இவருக்கு திருமணமாகி கல்யாணி என்ற மனைவி உள்ள நிலையில், இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது, கையும் களவுமாக மாட்டிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது செகந்திராபாத்தில் உள்ள வாரசிகுடாவில் வசித்து வரும் ஜானகிராம், தனது மனைவி கல்யாணியிடம் வெளியே செல்வதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். ஜானகிராம் மீது கல்யாணிக்கு சந்தேகம் இருந்ததால், அவருக்கே தெரியாமல் தனது குடும்பத்தினருடன் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
அப்போது ஜானகிராம் ஒரு வீட்டிற்குள் சென்றதை பார்த்த அவர்கள், சில நிமிடங்கள் அந்தப் பகுதியிலேயே காத்திருந்துள்ளனர். பின்னர் கல்யாணியும் அவரது குடும்பத்தினரும் திடுதிபுவென வீட்டுக்குள் புகுந்து, ஜானகிராம் தப்பிவிடாதபடி வீட்டை பூட்டியுள்ளனர். நிலமையை விபரீதம் ஆகிவிட்டதை புரிந்துகொண்ட ஜானகிராம், அவரது மனைவி கல்யாணியிடம் பேசி சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், ஜானகிராம் சொன்னதை, கல்யாணியும் அவரது குடும்பத்தினரும் காது கொடுத்துக்கூட கேட்கவில்லை.
அதோடு, ஜானகிராமின் காது மேலேயே பளாரென ஒரு அறைவிட்டனர். முதல் அடி விழுந்தது தான் தாமதம், அதன்பின்னர் ஜானகிராமை சூழ்ந்துகொண்ட அவர்கள், அவரது தலையிலும் முகத்திலும் மாறி மாறி குத்துவிட்டனர். இன்னொருபக்கம் கல்யாணியும் மேலும் சில பெண்களும், அறை கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல, அங்கிருந்த இளம்பெண் பாத்ரூமில் பதுங்கியுள்ளார். ஆனால் அவரையும் விடாமல் வெளுத்து வாங்கிய அந்த கும்பல், அவரது கழுத்தில் கிடந்த நகைகளையும் சைடு கேப்பில் ஆட்டையை போட்டுள்ளனர். இது எல்லாமே அவர்கள் எடுத்து வீடியோவிலேயே பதிவானது தான் கொடுமை.
அந்த பெண்ணை விட்டுவிடும்படி ஜானகிராம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பலனில்லை. அவர் கெஞ்சிய போதெல்லாம், எக்ஸ்ட்ராவாக முரட்டு குத்துகள் விழ, அப்படியே சுருண்டுவிட்டார். முக்கியமாக ஜானகிராமை விட அந்தப் பெண் 20 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று மொத்த கும்பலையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜானகிராமிற்கு இது புதுசு இல்லையென்றும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவரது மனைவி கல்யாணி கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியான போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத் மாநகராட்சியின் இணை ஆணையர் ஜானகிராம், இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது அவரது குடும்பத்தினரிடம் சிக்கி சின்னாபின்னமான சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.