CPL2024: கடைசி ஓவரில் 18 ரன்கள்.. ஒரே ஓவரில் ஹீரோவான பிரிடோரியஸ்..

கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில், ஆண்டிகுவா அணிக்கு எதிரான போட்டியில், கயானா அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது.

Aug 31, 2024 - 17:46
Aug 31, 2024 - 17:48
 0
CPL2024: கடைசி ஓவரில் 18 ரன்கள்.. ஒரே ஓவரில் ஹீரோவான பிரிடோரியஸ்..
கடைசி ஓவரில் 18 ரன்கள் விளாசிய ட்வைன் பிரிடோரியஸ்

பிரபலமான டி20 தொடர்களில் ஒன்றான, கரீபியன் பிரிமியர் லீக்2024 தொடர் கடந்த 29ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது லீக் போட்டியில், ஆண்டிகுவா பார்புடா பால்கன்ஸ் அணியும் [Antigua and Barbuda Falcons], கயானா அமேசான் வாரியர்ஸ் [Guyana Amazon Warriors] அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆண்டிகுவா அணி 20 ஓவர்கள் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக, இமத் வாசிம் 21 பந்துகளில் 40 ரன்களும், ஃபஹர் ஜமன் 33 பந்துகளில் 40 ரன்களும், கோஃபி ஜேம்ஸ் 24 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். கயானா அணி தரப்பில் குடகேஷ் மோடீ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கயானா அணியில், குடகேஷ் மோடீ (6), ரஹ்மதுல்லா குர்பாஷ் (20), ஷிம்ரன் ஹெட்மயர் (19), அசம் கான் (9), கீமோ பால் (10) என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், கயானா அணி 14.2 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் கடைசி 5 ஓவர்களில் 66 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது.

சிறிது நேரம் நம்பிக்கை அளித்த ஷாய் ஹோப் 41 ரன்களிலும் (34 பந்துகள்), ரொமாரியோ ஷெபெர்ட் 32 ரன்களிலும் (16 பந்துகள்) வெளியேறினர். இதனால், கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவையாக இருந்தது.

அப்போது களத்தில் இருந்த ட்வைன் பிரிடோரியஸ் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரிகளை விளாசினார்.

கடைசி மூன்று பந்துகளில் 8 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், 5ஆவது பந்தை பவுண்டரிக்கும், கடைசி பந்தை சிக்ஸருக்கும் விளாசி அணியை வெற்றிபெற வைத்தார். கடைசி ஓவரில் 18 ரன்கள் [0,44,0,4,6] எடுத்து வெற்றிபெற வைத்த பிரிடோரியஸ் அணியின் கதாநாயகன் ஆனார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow