கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 'தல' தோனி... நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகம்... பிரபலங்கள் வாழ்த்து மழை!

களத்தில் நொடிப்பொழுதில் சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன், எந்த ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாக இளம் வீரர்களை வழிநடத்தும் திறன், இந்திய அணி தோல்வியை நோக்கி 99% செல்லும் நிலையிலும், சிறந்த பினிஷிங் திறன் மூலம் அணியை வெற்றி பெற வைக்கும் விதம் ஆகியவை தோனியை மற்ற கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து ஒருபடி முன்னே வைக்கிறது.

Jul 7, 2024 - 13:21
Jul 8, 2024 - 12:44
 0
கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 'தல' தோனி... நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகம்... பிரபலங்கள் வாழ்த்து மழை!
தோனி பிறந்தநாள் கொண்டாட்டம்

மும்பை: இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 'இந்திய கிரிக்கெட்' வரலாற்றை தோனியின் பெயர் எழுதாமல் நாம் கண்டிப்பாக கடந்து போக முடியாது. 

1983ம் ஆண்டுக்கு பிறகு 24 ஆண்டுகளாக உலகக்கோப்பைக்காக ஏங்கிக் கொண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்று ஏக்கத்தை தணித்தவர் மகேந்திர சிங் தோனி. அத்துடன் நிற்காமல் 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்று இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சரித்திர சாதனை படைத்தார் தல தோனி.

பல காலமாக தனிநபர்களின் விளையாட்டை மட்டும் நம்பி உலகக்கோப்பை கனவு கண்ட இந்திய அணியில் இளம் வீரர்களின் திறமையை பாய்ச்சி, ஒரு குழுவாக விளையாடச் செய்து உலகக்கோப்பை கனவை நனவாக்கியவர் தல தோனி.

களத்தில் நொடிப்பொழுதில் சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன், எந்த ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாக இளம் வீரர்களை வழிநடத்தும் திறன், இந்திய அணி தோல்வியை நோக்கி 99% செல்லும் நிலையிலும், சிறந்த பினிஷிங் திறன் மூலம் அணியை வெற்றி பெற வைக்கும் விதம் ஆகியவை தோனியை மற்ற கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து ஒருபடி முன்னே வைக்கிறது.

இப்படியாக அசாத்திய திறமை கொண்ட தோனியின் பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் தோனிக்கு பிரம்மாண்ட 'கட்அவுட்' வைக்கப்பட்டுள்ளன. தோனி பெயரில் கோயில்களில் ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தோனி நடித்த 'M.S. Dhoni: The Untold Story' திரைப்படம் நாட்டின் பல்வேறு தியேட்டர்களில் இன்று சிறப்பு காட்சிகளாக திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு திரண்டு செல்லும் ரசிகர்கள் தோனியை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

#MSDhoni என்ற ஹேஸ்டேக் 'எக்ஸ்' தளத்தில் உலகளவில் டிரெண்ட்டாகி வருகிறது. இந்த ஹேஸ்டேக்கை வைத்து தோனிக்கு ரசிகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். கிரிக்கெட்டில் அவரது சாதனைகள், அவரது தனித்தன்மைகள் குறித்து ரசிகர்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 'தல' தோனி மனைவி சாக்ஷியுடன் சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானும் கலந்து கொண்டுள்ளார். தோனி கேக் வெட்டி மனைவி சாக்ஷிக்கும், சல்மான்கானுக்கும் ஊட்டி விடும் காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. 

மேலும் பல்வேறு சினிமா பிரபலங்களும், விராட் கோலி உள்பட பல்வேறு கிரிக்கெட் வீரர்களும்  கூல் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow