“காலமும், என்னுடைய விதியும் சரியாக அமையவில்லை” - வினேஷ் போகத் உருக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத், காலமும் என்னுடைய விதியும் சரியாக அமையவில்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Aug 17, 2024 - 19:50
Aug 17, 2024 - 20:09
 0
“காலமும், என்னுடைய விதியும் சரியாக அமையவில்லை” - வினேஷ் போகத் உருக்கம்

33-வது ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கி நேற்று [ஆகஸ்ட் 11-ம் தேதி வரை கோலகமாக நடைபெற்றது. இந்த ஒலிம்பிக் போட்டியில், சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வந்தனர்.

இந்த ஒலிம்பிக் தொடரில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அசத்தலாக விளையாடினார். 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டி முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார். 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க இருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவருக்கு தங்கம் கிடைக்கும். தோற்றாலும் வெள்ளி கிடைக்கும் என்ற பதக்க வாய்ப்பு அவருக்கு உருவாகி இருந்தது.

இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இருந்து வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்தது.

இறுதிப்போட்டிக்கு முன்பாக 2 கிலோ எடை அதிகரித்து இருந்ததை, அறிந்து கொண்ட வினேஷ் போகத், உணவு உண்ணாமல், இரவு முழுக்க அதிதீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டு ஒரே இரவில் 1.9 எடை குறைத்துள்ளார். முடிவில், 100 கிராம் எடையை குறைக்க முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதோடு, இரவு முழுவதும் உடற்பயிற்சி மேற்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் சார்பில் மனு தொடரப்பட்டது. முன்னதாக, பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்த இறுதிப்போட்டியில் விளையாட தன்னை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என அவா் கேட்டிருந்தாா்.

இந்த வழக்கு அடுத்தடுத்து 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வினேஷ் போகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வருமா? என ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருந்தது. இந்நிலையில், வினேஷ் போகத்தின் மனுவை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. வினேஷ் போகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது இந்திய ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், இந்த விவகாரம் குறித்து முதல்முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒலிம்பிக் வலையங்கள்: ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த சிறுமியாக இருந்த எனக்கு, ஒலிம்பிக் என்றால் என்ன அல்லது இந்த வலையங்கள் என்னவென்று தெரியாது. ஒரு சிறிய பெண்ணாக, நீண்ட கூந்தலுடன், கையில் தொலைபேசியை கட்டிக்கொண்டு, சாதாரணமாக கனவு காணும் ஒரு இளம் பெண்ணை போன்று நானும் கனவு கண்டேன்.

சாதாரண பேருந்து ஓட்டுநரான என் தந்தை என்னிடம், ஒரு நாள் தனது மகள் விமானத்தில் உயரமாகப் பறப்பதைக் கீழே சாலையில் ஓட்டிக்கொண்டு பார்ப்பேன் என்றும், என் தந்தையின் கனவுகளை நான் மட்டுமே நிஜமாக்குவேன் என்றும் கூறுவார். நான் அதைப்பற்றி பேச விரும்பவில்லை, ஆனால் நான் மூவரில் இளையவள் என்பதால் நான் அவருக்கு மிகவும் பிடித்த குழந்தை என்று நினைக்கிறேன். இதைப் பற்றி அவர் என்னிடம் சொல்லும்போது, ​​அதை நினைத்து அபத்தமாகச் சிரித்தேன், அது எனக்குப் பெரிதாகப் புரியவில்லை.

தன் வாழ்க்கையின் கஷ்டங்களை ஒரு முழுக்கதையாக எழுதக்கூடிய என் அம்மா, தன் பிள்ளைகள் அனைவரும் ஒரு நாள் தன்னை விட நன்றாக வாழ வேண்டும் என்று கனவு கண்டாள். சுதந்திரமாக இருப்பதும், தன் குழந்தைகள் சொந்தக் காலில் நிற்பதும் அவளுக்கு ஒரு கனவாகவே இருந்தது. அவளுடைய ஆசைகளும் கனவுகளும் என் தந்தையை விட மிகவும் எளிமையானவை.

ஆனால், என் தந்தை எங்களை விட்டுப் பிரிந்த நாளில், அந்த விமானத்தில் பறப்பதைப் பற்றிய அவரது எண்ணங்களும் வார்த்தைகளும் மட்டுமே எனக்கு எஞ்சியிருந்தன. அதன் அர்த்தம் பற்றி நான் அப்போது குழப்பமடைந்து இருந்தாலும், அந்த கனவை அப்படியும் என் அருகில் வைத்திருந்தேன். என் தாயின் கனவு இப்போதுமே மிக தொலைவில் உள்ளது. ஏனென்றால் என் தந்தை இறந்த சில மாதங்களுக்குப் பிறகு, 3 புற்றுநோயால் 3 நிலைகளை கடந்திருப்பது கண்டறியப்பட்டாது. குழந்தைப் பருவத்தை இழக்கும் மூன்று குழந்தைகளின் பயணம் இங்கே தான் தொடங்கியது. வாழ்க்கையின் யதார்த்தத்தை எதிர்கொண்டு பிழைப்புப் பந்தயத்தில் இறங்கியதால், நீண்ட கூந்தல், மொபைல் போன் என்ற எனது கனவுகள் விரைவில் மங்கிப்போயின.

அவர் எங்களுக்கு சரியான விஷயங்களை திட்டமிட்டார். நல்லவர்களுக்கு கெட்டதை கடவுள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்று அம்மா எப்போதும் கூறுவார். சோம்வீர், என் கணவர், ஆத்ம தோழன், துணை மற்றும் வாழ்க்கையின் சிறந்த நண்பர் ஆகியோருடன் நான் பாதைகளை கடக்கும்போது இதை இன்னும் அதிகமாக நம்பினேன். சோம்வீர் என் வாழ்வின் ஒவ்வொரு இடத்தையும் தோழமையுடன் எடுத்து, பங்களிப்பை செலுத்தி எனக்கு ஆதரவாக இருந்தார்.

எனது பயணம் பலரைச் சந்திக்க அனுமதித்துள்ளது. அதில், மிகவும் நல்லவர்களும், சில கெட்டவர்களும் இருந்தார்கள். கடந்த ஒன்றரை, இரண்டு ஆண்டுகளில், நிறைய சம்பங்கள் நடந்துள்ளன. என் வாழ்க்கை பல திருப்பங்களை கொண்டிருந்தது. நாங்கள் புதைகுழியில் இருந்து வெளியேற வழி இல்லாததால், வாழ்க்கையே நின்றுபோனது போல உணர்ந்தேன். ஆனால் என்னைச் சுற்றியிருந்தவர்கள் அவர்களிடம் நேர்மையைக் கொண்டிருந்தனர், அவர்கள் எனக்கு நல்லெண்ணத்தையும், மிகப்பெரிய ஆதரவையும் கொடுத்தனர்.

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தின்போது, இந்திய பெண்கள் மற்றும் நம் தேசிய கொடியின் புனிதத்தை பாதுகாக்க கடுமையாக போராடினேன். ஆனால் கடந்த ஆண்டு மே 28 அன்று முதல் தேசியக் கொடியுடன் நான் இருக்கும் புகைப்படங்களை பார்க்கும்போது அது என்னை பயமுறுத்துகிறது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியக் கொடியை உயரே பறக்க வைக்க வேண்டும் என்பதும், அதன் மதிப்பை பிரதிபலிக்கும் வகையில் அதை என்னுடைய வைத்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதும் எனது விருப்பமாக இருந்தது. அப்படி செய்வது, மல்யுத்தத்துக்கு நடந்தவற்றையும், தேசிய கொடிக்கு நடந்தவற்றையும் கண்டிக்கும் விதமாக இருக்கும் என்று நினைத்தேன்.

சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் அவற்றை சொல்ல வார்த்தைகள் ஒருபோதும் போதுமானதாக இருக்காது. நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் பேசுவேன். ஆகஸ்ட் 6ம் தேதி இரவும், ஆகஸ்ட் 7ம் தேதி காலையும் நடந்தது குறித்து நான் சொல்ல விரும்பவதெல்லாம் இதுதான். நாங்கள் பின்வாங்கவில்லை. எங்கள் முயற்சிகள் ஒருபோதும் நிற்கவில்லை. நாங்கள் சரணடையவில்லை. ஆனால் கடிகாரம் நின்றுவிட்டது, காலம் சரியானதாக அமையவில்லை. என்னுடைய விதியும்தான்.

நாங்கள் உழைத்துக் கொண்டிருந்த, சாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ஒன்று, எனது குழுவினருக்கும், எனது சக இந்தியர்களுக்கும், எனது குடும்பத்தினருக்கும் நிறைவடையாமல் போய்விட்டதாக உணர்கிறேன். அது இனி எப்போதும் இல்லாமல் போகலாம். விஷயங்கள் எதுவும் இனி முன்பு போல இல்லாமல் போகலாம். ஒருவேளை சூழல்கள் வேறாக இருந்திருந்தால் 2032 வரைக்கும் நான் விளையாடியிருக்கக் கூடும். ஏனென்றால் எனக்குள் இருக்கும் போராட்டமும், மல்யுத்தமும் எப்போதும் அப்படியேதான் இருக்கும். எதிர்காலம் எனக்காக என்ன வைத்திருக்கிறது என்பதை என்னால் கணிக்க இயலாது. ஆனால் நான் நம்பும் விஷயத்துக்காக, சரியானவற்றுக்காக நான் தொடர்ந்து எப்போதும் போராடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow