தமிழ்நாடு

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி!

By Christon
04 Jun 2026, 10:14 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, இன்று சற்றுக் குறைந்து நுகர்வோருக்குச் சிறிதளவு ஆறுதலைத் தந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களின் அடிப்படையில் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் தங்கம் விலையானது, கடந்த சில மாதங்களாகக் கடுமையான உயர்வைச் சந்தித்து வந்தது. ஒரு சவரன் தங்கம் 1 லட்ச ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வந்ததால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவியது.

இந்தச் சூழலில், கடந்த மூன்று தினங்களாக விலையில் மாற்றம் இல்லாததைத் தொடர்ந்து, இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,15,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,480-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று சரிவைச் சந்தித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து, ரூ.285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, கிலோவிற்கு ரூ.5,000 வரை குறைந்து, ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.2,85,000-க்கு விற்பனையாகி வருகிறது. உலகளாவிய சந்தை மாற்றங்களுக்கு இடையே தங்கம் மற்றும் வெள்ளியின் இந்த விலை வீழ்ச்சி நுகர்வோரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.