தமிழ்நாடு

வார தொடக்கத்தில் நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை மீண்டும் உயர்வு!

By Christon
25 May 2026, 10:27 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்திருந்த ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் தொடக்க நாளான இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதேநேரம், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமுமின்றி அதே விலையில் நீடிக்கிறது.

சென்னையில் கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,840-க்கு விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்தது. இந்நிலையில், புதிய வாரத்தின் தொடக்க நாளான இன்று (மே 25) தங்கத்தின் விலை மீண்டும் ஏறுமுகத்தைச் சந்தித்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,18,240-க்கு விற்பனையாகி வருகிறது. சனிக்கிழமை குறைந்த விலை இன்று ஒரே நாளில் மீண்டும் அதிகரித்துள்ளது நகைப்பிரியர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றமில்லாத வெள்ளி விலை

தங்கத்தின் விலை உயர்ந்தாலும், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் இன்று ஆபரண வெள்ளி விலை கடந்த இரண்டு நாட்களாக நீடித்த அதே விலையிலேயே தொடர்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை மாற்றமின்றி இன்றும் ரூ.2,95,000-க்கும் விற்பனையாகி வருகிறது.