தமிழ்நாடு

MGM HEALTHCARE : உலக பக்கவாத தின அனுசரிப்பு ! குடையுடன் விழிப்புணர்வு நடைபயணம் !

By Santhosh
29 Oct 2026, 07:50 PM
சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை சார்பில் உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ‘ஸ்ட்ரைடு ஃபார் ஸ்ட்ரோக்’ விழிப்புணர்வு நடைப்பயணத்தில் நடிகை ரம்யா சுப்பிரமணியன் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உரிய நேரத்தில் பக்கவாத சிகிச்சை பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த 3 கி.மீ. நடைப்பயணம் நடைபெற்றது.

எம்.ஜி.எம் ஹெல்த்கேர்-ல் உலக பக்கவாத தின அனுசரிப்பு குடையுடன் விழிப்புணர்வு நடைப்பயணம்: 'ஸ்ட்ரைடு ஃபார் ஸ்ட்ரோக்'

· பக்கவாத பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் மற்றும் சிகிச்சையின் மூலம் பக்கவாதம் வராமல் பாதுகாக்கப்பட்டவர்கள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

சென்னை, அக்டோபர் 29, 2026: உலகப் பக்கவாத தினத்தை முன்னிட்டு, உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை சார்பில் 'ஸ்ட்ரைடு ஃபார் ஸ்ட்ரோக்' என்று பெயரிடப்பட்ட குடையுடன் கூடிய 3 கிலோமீட்டர் தூர விழிப்புணர்வு நடைப்பயணம் மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கியது. பக்கவாத பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் மற்றும் பக்கவாதம் வராமல் சிகிச்சையால் பாதுகாக்கப்பட்டவர்கள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வை நடிகை ரம்யா சுப்பிரமணியன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை துறை இயக்குநர் டாக்டர் ரூபேஷ் குமார், மருத்துவக் குழுத் தலைவர் மற்றும் மூத்த ஆலோசகர் டாக்டர் வாசுதேவன், நரம்பியல் நிபுணர் டாக்டர் ஸ்ரீவர்தன் மற்றும் தலையீட்டு கதிரியக்கவியல் துறையின் மருத்துவக் குழு தலைவர் டாக்டர் ஆர்த்தி தீபேஷ் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலையில் வகித்தனர்.

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும்போதோ அல்லது மூளையில் உள்ள ரத்தக்குழாய் வெடிக்கும்போதோ பக்கவாத/ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இதனால் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் மூளை செல்கள் அழியத் தொடங்கும் ஒரு அவசர மருத்துவ நிலையாகும். இது ஒருவரின் இயக்கம், பேச்சு, பார்வை, ஞாபக சக்தி மற்றும் அன்றாடச் செயல்களைச் செய்யும் திறனைப் பாதிக்கிறது. சில நிமிடங்களிலேயே மூளை செல்கள் இறக்கத் தொடங்குவதால், உடனடியாக உரிய சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம்.

உலகப் பக்கவாத அமைப்பின் ஆய்வின்படி, நான்கு பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் பக்கவாதம் வருவதற்கான அபாயம் உள்ளது. மேலும், உலகளவில் ஆண்டுதோறும் 1.2 கோடிக்கும் அதிகமானோர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்பு மற்றும் நீண்ட கால உடல் ஊனத்திற்கும் இது ஒரு முக்கியக் காரணமாகும்.

எனவேதான், பக்கவாதம் வராமல் தடுப்பது, அதன் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது மற்றும் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டுதோறும் அக்டோபர் 29-ஆம் தேதி உலகப் பக்கவாத தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. "ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்" என்பதையும், அறிகுறிகளை விரைவாகக் கண்டறிந்து "விரைவாகச் செயல்படுவோம்" (#ActFast) என்பதையும் இந்த ஆண்டின் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மையமாகக் கொண்டுள்ளது. எவ்வளவு விரைவாகச் சிகிச்சை தொடங்கப்படுகிறதோ, குணமடையும் வாய்ப்புகளும் அந்தளவிற்கு அதிகமாக இருக்கும்.

மக்கள் கவனத்தை ஈர்த்து விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், பங்கேற்பாளர்கள் தங்கள் இளம் சிவப்பு நிறக் குடைகளை உயர்த்திப் பிடித்து இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டனர். 90 சதவீதத்திற்கும் அதிகமான பக்கவாத நோயாளிகள், சிகிச்சைக்கான முக்கியக் காலகட்டமான நான்கரை மணி நேரத்தைத் தாண்டிய பிறகே மருத்துவமனைக்கு வருவதால், சிகிச்சை தொடங்குவதும் மற்றும் குணமடையும் செயல்முறையும் தாமதமாகிறது. எனவே, அந்த 'கோல்டன் ஹவர்' குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நடைப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். முகத்தில் ஏற்படும் கோணல், கைகளைத் தூக்க முடியாமை மற்றும் பேசுவதில் சிரமம் ஆகியவை பக்கவாதத்தின் சில பொதுவான அறிகுறிகளாகும்.

டாக்டர் ரூபேஷ் குமார் இது குறித்துப் பேசுகையில், “பக்கவாதம் என்பது நேரத்துடனான ஒரு போராட்டமாகவே இருக்கிறது. சிகிச்சையை பெற தாமதித்து வீணடிக்கப்படும் ஒவ்வொரு நொடியும், நோயாளியின் குணமடையும் வாய்ப்பைக் குறைத்து வாழ்நாள் முழுவதுமான ஊனத்தை ஏற்படுத்திவிடும். பக்கவாதத்தை எவ்வளவு விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோமோ, அந்த அளவுக்கு மூளை பாதிப்பைக் குறைத்து, நீண்ட கால ஊனம் வராமல் தடுக்க முடியும். உடலின் ஒரு பக்கத்தில் திடீரென ஏற்படும் பலவீனம் அல்லது மரத்துப்போதல், முகம் கோணுதல், பேசுவதில் சிரமம் அல்லது திடீரென உடல் நிலைத்தன்மையை இழத்தல் போன்ற பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பது மிகவும் அவசியம். அதேபோல, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகள் பக்கவாதம் வருவதற்கான அபாயத்தைக் கணிசமாக அதிகரிக்கும் என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். பக்கவாதம் வராமல் தடுக்க மக்கள் தங்கள் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்வதுடன், முறையான உடல்நலப் பரிசோதனைகளை குறித்த காலஅளவுகளில் செய்துகொள்ள வேண்டும்,” என்றார்.

திரு. பத்மநாபன் தலைமைச் செயல் அலுவலர் கூறுகையில், “மருத்துவத் துறை வல்லுநர்களாகிய நாங்கள், ஒவ்வொரு பக்கவாத பாதிப்புக்குப் பின்னாலும் ஒரு உயிர், ஒரு குடும்பம் மற்றும் வளமான வாழ்வுக்கான எதிர்காலம் இருப்பதை உணர்ந்துள்ளோம். இந்த உலகப் பக்கவாத தினத்தில், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தற்காப்பு மருத்துவத்தை ஊக்குவிக்கவும், அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். மருத்துவ உதவியை நாடுவதில் சில நிமிடங்கள் கூட தாமதிக்காமல், வீணடிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம். பக்கவாதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நொடியும் முக்கியம்; ஒவ்வொரு சிகிச்சை நடவடிக்கையும் முக்கியம். விரைவாகச் செயல்படுவதன் மூலம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,” என்றார்.