தமிழ்நாடு

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்: முதல்வர் விஜய் ஆணை வழங்கினார்!

By Christon
13 Jul 2026, 02:46 PM
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் பேச்சாளர் லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ நியமன ஆணையை முதல்வர் விஜய் இன்று வழங்கியுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் விநியோகம் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை மேற்கொள்ளும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன ஆணையைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று நேரில் வழங்கினார். இந்த நிகழ்வின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உடனிருந்தார்.

முன்னதாக, திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராகத் திண்டுக்கல் ஐ. லியோனி பொறுப்பு வகித்து வந்தார். தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, த.வெ.க-வின் முக்கியப் பேச்சாளரான லயோலா மணி இந்தப் புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.