தமிழ்நாடு

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 2,160 அதிகரிப்பு!

By Christon
19 Feb 2026, 10:03 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்துள்ளது. நகைப்பிரியர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இந்தத் திடீர் விலை மாற்றம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

கடந்த பிப்ரவரி 16-ம் தேதி ஒரு சவரன் ரூ. 1,15,520-க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து வந்த நாட்களில் விலை படிப்படியாகக் குறைந்து, நேற்று ஒரு சவரன் ரூ. 1,13,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,16,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 270 உயர்ந்து, ரூ. 14,500-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்வைக் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளிக்கு ரூ. 10 அதிகரித்து, ரூ. 270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ. 2,70,000-ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து சரிந்து வந்த விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது, நகை வாங்குவோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதாரச் சூழல் மற்றும் பங்குச் சந்தை நிலவரங்களே இந்தத் திடீர் விலையேற்றத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.