சென்னையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று முதல் மீண்டும் ஏறுமுகமாக மாறி இன்று மேலும் உயர்ந்துள்ளது. இந்தத் திடீர் விலை உயர்வு நகை வாங்குவோரைச் சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை
இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டது. திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.1,120-உம், செவ்வாய்க்கிழமை ரூ.1,280-உம் குறைந்த நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் மொத்தம் ரூ.1,200 வரை சரிந்தது. நேற்று வியாழக்கிழமை காலையிலும் ₹240 குறைந்த தங்கம் விலை, எதிர்பாராத விதமாக நேற்று மாலையில் திடீரென ரூ.800 உயர்ந்தது.
அந்த விலையேற்றத்தின் தொடர்ச்சியாக, இன்று (ஜூலை 10, வெள்ளிக்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.240 அதிகரித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,06,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,350-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வரும் அதே வேளையில், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், தொழில்துறை பயன்பாட்டிற்கான ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,45,000 என்ற நேற்றைய விலையிலேயே எவ்வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.