உலகளாவிய சந்தை நிலவரங்களின்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் லேசான உயர்வைச் சந்தித்துள்ளது.
சர்வதேச சந்தை மாற்றங்களால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால் முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் ஒருவித குழப்ப நிலை நீடித்து வருகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றைய தினம் தங்கம் விலை மீண்டும் சரிவிலிருந்து மீண்டு, சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்துள்ளது. இதன் மூலம், சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.230 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை இன்று உயர்வைக் கண்டுள்ள போதிலும், வெள்ளியின் விலையில் கடந்த இரண்டு தினங்களாக எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி தொடர்ந்து அதே விலையான ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஒரு கிலோ வெள்ளியின் விலையும் எவ்வித மாற்றமுமின்றி இன்று ரூ.2,70,000-க்கு விற்பனையாகி வருகிறது.