தமிழ்நாடு

தங்கம் விலை மேலும் சரிவு.. இல்லத்தரசிகள் ஹேப்பி!

By Christon
29 Jul 2026, 10:48 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை, தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சரிவைக் கண்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை சமீபத்தில் சரிவைக் கண்டிருந்தாலும், கடந்த வாரம் முழுவதும் உயர்வையே பதிவிட்டு வந்தது. இடையே கடந்த 23-ஆம் தேதி சவரனுக்கு ரூ.2,160 வரை குறைந்து, பின்னர் மீண்டும் ஏற்றம் கண்டது.

அதன்படி, நேற்று முன்தினம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,06,960-க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து, நேற்று அதிரடியாகச் சவரனுக்கு ரூ.1,240 சரிந்து, ஒரு சவரன் ரூ.1,05,720-க்கும், ஒரு கிராம் ரூ.13,215-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கத்தின் விலை இன்றும் சரிவைச் சந்தித்துள்ளது. சென்னையில் கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,240-ஐ எட்டியுள்ளது.

அதேவேளையில், வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய நிலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.