தமிழ்நாடு

தொடர் சரிவில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி!

By Christon
27 May 2026, 10:20 AM
சென்னையில் இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 640 குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாகத் தொடர் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்றைத் தொடர்ந்து இன்றைய தினமும் (மே 27) கணிசமான சரிவைக் கண்டுள்ளது. அதேபோல், வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது.

சர்வதேச போர் பதற்றம், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய காரணங்களால் தங்கத்தின் விலை பொதுவான உயர்வுப் போக்கைக் கொண்டிருந்தாலும், உள்நாட்டுச் சந்தையில் அவ்வப்போது விலை குறைந்தும் வருகிறது. அந்த வகையில், நேற்று செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.400 குறைந்திருந்த நிலையில், 2வது நாளான இன்றும் தங்கத்தின் விலை மேலும் சரிவைச் சந்தித்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, சவரனுக்கு ரூ.640 வரை சரிந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,17,200-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை

தங்கத்தின் விலையைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் நீடித்து வருகிறது. சென்னையில் இன்றும் வெள்ளி விலை மாற்றமில்லாமல் ஒரு கிலோ ரூ.2,95,000-க்கும் ஒரு கிராம் ரூ.295க்கும் விற்பனை செய்யப்படுகிறது.