நேற்று கணிசமான சரிவைக் கண்ட ஆபரணத் தங்கத்தின் விலை, சென்னையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்றத்தைக் கண்டு வந்தது. கடந்த திங்கட்கிழமை ஒரு கிராம் ரூ.13,150-க்கும், சவரன் ரூ.1,05,200-க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் தொடர்ந்து உயர்ந்தது.
இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து, சவரனுக்கு ரூ.2,160 வரை சரிந்தது. இதனால் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,840-க்கும், ஒரு கிராம் ரூ.13,230-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
நேற்றைய சரிவுக்குப் பின் இன்று தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னையில் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,300-க்கு விற்பனையாகிறது.
அதேவேளையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே தொடர்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.