சர்வதேச சந்தை நிலவரங்களின்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாகக் கடுமையான உயர்வைச் சந்தித்து வந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விலை குறைந்து நுகர்வோருக்கு நிம்மதியளித்துள்ளது.
உலகளாவிய சந்தை மாற்றங்களால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவி வந்தது. குறிப்பாக, ஒரு சவரன் தங்கம் 1 லட்ச ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வந்தது. இந்தச் சூழலில், நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்ததைத் தொடர்ந்து, இன்றைய தினமும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.400 குறைந்துள்ளது. இதன் மூலம், சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,15,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,430-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று சரிவைச் சந்தித்துள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மேலும் ரூ.5 குறைந்து, ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஒட்டுமொத்தமாக கிலோவிற்கு ரூ.5,000 வரை குறைந்து, ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.2,80,000-க்கு விற்பனையாகி வருகிறது.