தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, கடந்த இரண்டு நாட்களாகவே அடுத்தடுத்து அதிரடியாக குறைந்து வருவது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம்
நேற்றைய தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,06,800-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இன்றைய தினமும் தங்கத்தின் விலை அதே அளவாக சவரனுக்கு மீண்டும் ரூ.1,680 அதிரடியாகக் குறைந்துள்ளது.
இதன் மூலம், இன்று சந்தையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,120 என்ற அதிரடி விலைக் குறைவான நிலைக்கு வந்துள்ளது. அதேபோல், கிராமுக்கு மேலும் ரூ.210 குறைந்து, இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,140-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலைத் தொடர் சரிவைப் பின்பற்றி, வெள்ளியின் விலையும் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களுமே கணிசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், கிலோவிற்கு ரூ.10,000 வரை சரிந்து, இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,30,000 என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக எட்டாக்கனியாக இருந்த தங்கம், வெள்ளி விலை தற்போது தொடர்ந்து சரிந்து வருவது நகை வாங்குவோருக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.