சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூன் 25) பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேரடி தெரு, கிழக்கு மற்றும் தெற்கு மாட தெரு, குளக்கரை தெரு, வி.ஜி.என். மகாலட்சுமி நகர், திருநீர்மலை பிரதான சாலை, வேம்புலி அம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, மல்லிமா வீதி, சிவராஜ் தெரு, ஒய்யாளியம்மன் கோவில் தெரு, வைத்தியகார தெரு, மேட்டு தெரு, ஜெகஜீவன் ராம் தெரு, சர்வீஸ் சாலை, காந்தி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
அதேபோல், எம்கேபி நகர், மகளிர் தொழிற்பேட்டை பூங்கா, பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், வழுதலம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவியரா அபார்ட்மெண்ட், அமர்பிரகாஷ் அபார்ட்மெண்ட், குன்றத்தூர், குமரன் நகர், மகாலட்சுமி கூட்டுறவு சங்கம், பிகேவி மகா நகர், கலைமகள் நகர், கற்பகம் நகர், டசியோவா தொழிற்பேட்டை பூங்கா ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
மேலும், அண்ணாசாலை, ஓயிட்ஸ் ரோடு, ஜி.பி. ரோடு, கிளப் ஹவுஸ் ரோடு, பட்டுலால்ஸ் ரோடு, எக்ஸ்பிரஸ் அவென்யூ எஸ்டேட், வி.சி. ரோடு, இந்தியன் வங்கி, எத்திராஜ் கல்லூரி, ராணி மெய்யம்மை விடுதி, ஏர் இந்தியா அலுவலகம், மார்ஷல்ஸ் ரோடு, கனரா வங்கி, கன்னிமரா ஹோட்டல், தாஜ் ஹோட்டல், வுட்ஸ் ரோடு, பி.ஆர். காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை மின் தடை அமல்படுத்தப்படவுள்ளது.
மக்கள் தங்களது அன்றாட தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.