தமிழ்நாடு

தமிழகத்தில் இந்தி தேர்வு எழுத இத்தனை லட்சம் பேர் விண்ணப்பமா?

By Jayakumar
15 Jun 2025, 10:05 AM
ஜூலை, ஆகஸ்ட்டில் இந்தி தேர்வுகள் 8 நிலைகளாக நடைபெற உள்ளது. இதற்கு சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்
தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இருமொழி கொள்கையே அரசு பின்பற்றி வருகிறது.

இந்தி தேர்வு

இந்தி திணிப்புக்கு எதிராக கடும் எதிர்ப்புகள், போராட்டங்கள் நடைபெற்றாலும், விருப்பப்பட்டு இந்தி படிப்பவர்களுக்கு தமிழகத்தில் தடை எதுவும் இல்லை. சொல்லப்போனால் 3வது மொழியான இந்தியை படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் உள்ளது.

இந்தி பிரசார சபா நடத்தும் தேர்வுகளை கடந்த ஆண்டில் சுமார் 3.50 லட்சம் பேர் எழுதினர். ஆந்திராவில் 1.15 லட்சம் பேரும், கர்நாடகா மற்றும் கேரளாவில் 25 ஆயிரம் பேரும் இந்தி தேர்வை எழுதினர். இதில் தென் மாநிலங்களான தமிழகத்தில் தான் அதிகமானவர்கள் இந்தி தேர்வை எழுதியுள்ளனர்.

அதிகளவில் விண்ணப்பம்

இந்த நிலையில் வரும் ஜூலை, ஆகஸ்ட்டில் இந்தி தேர்வுகள் 8 நிலைகளாக நடைபெற உள்ளது. இதற்கு சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் இருந்து அதிகமானவர்கள் இந்தி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதன்மூலம் இந்தாண்டும் தமிழகத்தில் இருந்து இந்தி தேர்வுக்கு அதிகளவில் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.