அரசியல்

CM விஜய் கட்டியிருந்த வித்தியாசமான கயிறு?...கவனிச்சீங்களா? இதன் பின்னணி என்ன?

By Santhosh
02 Oct 2026, 05:01 PM
மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோவில், அவரது வலது காலில் கட்டப்பட்டிருந்த கயிறு என்ன, எதற்காக அணிந்துள்ளார் என்பது குறித்து நெட்டிசன்கள் மத்தியில் விவாதம் தொடங்கியுள்ளது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி, மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக விஜய் இன்று ரோடு ஷோ மேற்கொண்டார்.

மதுராந்தகத்தில் விஜயின் ரோடு ஷோ

மாமண்டூரில் பிற்பகல் தொடங்கிய விஜயின் ரோடு ஷோ, மதுராந்தகம் நோக்கி நடைபெற்றது. சுமார் 45 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் இந்தப் பிரசாரப் பயணத்தில், பல்வேறு பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து விஜய் வாக்கு சேகரித்து வருகிறார்.

ரோடு ஷோ சென்ற வழியெங்கும் திரண்டிருந்த பொதுமக்களும், தவெக தொண்டர்களும் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசார வாகனத்தில் வேட்பாளர் மரகதம் குமரவேலுடன் நின்றபடி, பொதுமக்களை நோக்கி கை அசைத்தும் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

விஜயின் காலில் இருந்த கயிறு... என்ன காரணம்?

இந்த ரோடு ஷோ தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில், விஜயின் வலது காலில் ஒரு கயிறு கட்டப்பட்டிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பொதுவாக இதுபோன்ற கயிறுகள் ஆன்மிகம், நேர்த்திக்கடன் அல்லது தனிப்பட்ட நம்பிக்கை உள்ளிட்ட காரணங்களுக்காக அணியப்படுவது வழக்கம். ஆனால், விஜய் தனது காலில் கட்டியிருந்த அந்தக் கயிறு எதற்காக அணியப்பட்டது.

இதனால், “விஜயின் காலில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கயிறு என்ன? இதற்குப் பின்னால் ஏதேனும் ஆன்மிக காரணம் இருக்கிறதா?” என்ற கேள்வி அவரது ரோடு ஷோ காட்சிகளைப் பார்த்தவர்களிடையே எழுந்துள்ளது.