அரசியல்

"அன்புமணி தூண்டுதலில் தாக்குதல்"- ரத்தக்காயங்களுடன் வீடியோ வெளியிட்ட ராமதாஸ் உதவியாளர்!

By Christon
06 Mar 2026, 04:31 PM
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து இருந்த ராமதாஸ் உதவியாளர் சுவாமிநாதன் மீது அன்புமணி ஆதரவாளர்கள் சரமாரி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் ஒரு எம்பி பதவியை அன்புமணிக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது. நேற்றைய தினம் அதிமுக ஆதரவுடன் அன்புமணி தலைமை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் உதவியாளர் சுவாமி நாதன் ஆதரவு எம்எல்ஏக்கள் அருள், ஜி.கே.மணியுடன் நேற்று மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனுதாக்கல் செய்து இருந்தார்.

இன்றைய தினம் வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் அன்புமணியன் வேட்புமனுவுக்கு ராமதாஸ் தரப்பு கடும் ஆட்சேபனம் தெரிவித்தது. மேலும் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியது. ஆனால் அன்புமணி மனுவை ஏற்றுகொண்டு, சுவாமி நாதன் முறையாக வேட்புனு தாக்கல் செய்யவில்லை என தள்ளுபடி செய்தனர்.

இன்று வேட்புமனு பரிசீலனை முடிந்து தலைமை செயலகத்தில் இருந்து வெளியே சுவாமி நாதன் மீது மர்மநபர்கள் இரண்டு பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மனுபரிசீலனை முடிந்து வெளியே வந்த போது 2 பேர் எங்களை பின்தொடர்ந்தனர். பின்னர் என்னை கடுமையாக தாக்கியதில் முகத்தில் காயங்கள் ஏற்பட்டது.

அன்புமணி, சவுமியா தூண்டுதலில் 2 பேர் எங்களை பின் தொடர்ந்து கடுமையாக தாக்கினர் என அந்த வீடியோவில் பேசி உள்ளார். ராஜ்யசபா தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த ராமதாஸ் உதவியாளர் சாமிநாதனை மர்ம நபர்கள் தாக்கிவிட்டதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் ராமதாஸ் ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.