அரசியல்

திராவிடக் கட்சிகள் கைகோர்க்கிறதா? ஸ்டாலினைச் சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி?

By Christon
08 May 2026, 01:46 PM
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு மத்தியில், இன்று மாலை ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு மத்தியில், இன்று மாலை ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கான 'மேஜிக்' எண்ணான 118-ஐ எட்டுவதில் சிக்கல் நீடிக்கிறது. தனிப்பெரும் கட்சியாகத் தவெக உருவெடுத்தாலும், ஆளுநரின் நிபந்தனையால் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், தமிழக அரசியலில் பரம்பரை எதிரிகளாகக் கருதப்படும் திமுகவும், அதிமுகவும் கைகோர்க்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிபந்தனையுடன் கூடிய ஆதரவு: பாஜகவிற்கு செக்!

அதிமுக ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவை திமுக வழங்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கு ஒரு முக்கிய நிபந்தனையை திமுக விதித்துள்ளதாகத் தெரிகிறது. அதிமுக தனது கூட்டணியிலிருந்து பாஜகவை முழுமையாகத் துண்டித்துவிட்டு வந்தால் மட்டுமே, வெளியிலிருந்து ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக திமுக அறிவிக்க வாய்ப்புள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இடதுசாரி கட்சிகளின் ஆதரவும் உறுதி?

திமுக எடுக்கும் இந்த முடிவைத் தொடர்ந்து, அக்கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) ஆகிய கட்சிகளும் அதிமுக ஆட்சிக்குத் தங்கள் ஆதரவை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்கவும், பாஜகவின் மறைமுகத் தலையீட்டைத் தவிர்க்கவும் இந்த முடிவை எடுக்க இடதுசாரி தலைவர்கள் ஆலோசித்து வருவதாகத் கூறப்படுகிறது.