ஆன்மிகம்

இந்த வார ராசி பலன் - யதார்த்த ஜோதிடர் ஷெல்வி...

By Sumalekha
23 Aug 2026, 06:30 AM
இந்த வார ராசி பலன்களில் எந்தெந்த ராசிகள் பயனடையும், சொல்கிறார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வி...
மேஷம்:

பலகாலக் கனவுகள் நனவாகக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். புதிய பணிக்கான தொடக்கங்கள் தெரியும். குடும்பத்தில் சீரான போக்கு நிலவும். வரவில் இருந்த தடைகள் நீங்கும். வாழ்க்கைத்துணை உடல்நலம் சீராகும். இளம் வயதினரின் விருப்பங்கள் பெரியோரால் ஏற்கப்படும். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். அரசு, அரசியலில் மேலதிகாரிகள் ஆதரவினால் பெருமை சேரும். கலைஞர்கள் திறமைக்கு உரிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இரவில் தனியே நெடுந்தொலைவு செல்லவேண்டாம். அடிவயிறு, முதுகு உபாதைகள் வரலாம். முருகன் வழிபாடு முன்னேற்றம் தரும்.

ரிஷபம்:

தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் முடங்கி இருந்த நிலை மாறும். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். இல்லத்தில் இனியவை நடக்கத் தொடங்கும். தடைபட்ட விசேஷங்கள் வரத்தொடங்கும். பெற்றோர், பெரியோர் உடல்நலன் சீராகும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். மூன்றாம் நபர் தலையீட்டை குடும்பத்தில் அனுமதிக்க வேண்டாம். செய்யும் தொழிலில் லாபம் சீராகும். அரசு, அரசியலில் வீண் பழிகள் வரலாம், நிதானம் முக்கியம். கலைஞர்கள் வாய்ச்சவடால் தவிருங்கள். வாகனப் பழுதை உடனுக்குடன் கவனியுங்கள். அலர்ஜி, அல்சர், ரத்த நாளப் பிரச்னைகள் வரலாம். பைரவர் வழிபாடு பசுமையாக்கும்.

மிதுனம்:

பணிவுடன் செயல்பட்டால், பலவகையிலும் நன்மைகள் ஏற்படக்கூடிய காலகட்டம். பணி யிடத்தில் துணிவை விட பணிவே நல்லது. இடமாற்றம் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும். குடும்பத்தில் குதர்க்கம் தவிர்த்துப் பேசுவது நல்லது. வாரிசுகளிடம் அதீத கண்டிப்பு வேண்டாம். சுபகாரியங்களில் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். தம்பதியர் உடல்நலனில் அலட்சியம் வேண்டாம். செய்யும் தொழில் உழைப்புக்கு ஏற்ப உயரும். அரசு, அரசியலில் உள்ளோர் அகலக்கால் வைக்க வேண்டாம். கலை, படைப்புத் துறையினர் சோம்பல் தவிர்ப்பது முக்கியம். இரவுப் பயணத்தில் நிதானம் முக்கியம். ரத்த அழுத்த மாறுபாடு, பரம்பரை உபாதை வரலாம். சிவன், பார்வதி வழிபாடு சிறப்பு சேர்க்கும்.

கடகம்:

சங்கடங்கள் நீங்கி, சாதகமாகக் காற்று வீசும் காலகட்டம். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டு கிட்டும். எதிர்பார்த்த பணி வாய்ப்புகள் கைகூடி வரும். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். யாருடைய குறையையும் பெரிதுபடுத்த வேண்டாம். வரவை சேமியுங்கள். தம்பதியரிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் மாற்றங்கள் செய்ய நேரிடலாம். அரசு, அரசியலில் ஆதரவு நிலைக்கும். கலைஞர்கள் சஞ்சலம் சபலம் தவிருங்கள். பயணத்தில் உடைமை பத்திரம். பசியின்மை, கண்வலி, தலைவலி தொல்லை தரலாம். மாருதி வழிபாடு, மகிழ்ச்சி சேர்க்கும்.

சிம்மம்:

அமைதியால் அனுகூலங்களைப் பெறவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் கைகூட, நேர்வழி முயற்சிகளே நல்லது. உடனிருக்கும் யாரிடமும் வீண் தர்க்கம் வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி நிலவத்தொடங்கும். வீண் ரோஷம் தவிருங்கள். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் புதிய முதலீடுகள் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு நிலைக்கும். கலை, படைப்புத் துறையினர்க்கு வாய்ப்புகள் வரத்தொடங்கும். இரவு பயணத்தில் போதுமான ஓய்வு முக்கியம் மூட்டு, முதுகு, வயிறு உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு செழிப்பு சேர்க்கும்.

கன்னி:

விட்டுக்கொடுத்தால், விசேஷங்கள் வரும் காலகட்டம். அலுவலகத்தில் செயல்களில் திட்டமிடலும் கவனமும் முக்கியம். எதிர்பார்த்த இடமாற்றம் கைகூடிவரும். இல்லத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும். சுபகாரியங்களில் பெரியோர் ஆலோசனைகளைக் கேளுங்கள். கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை. வாரிசுகளால் பெருமை உண்டு. செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப ஆதாயம் கிட்டும். அரசு, அரசியல் சார்ந்தோர்க்கு நாவடக்கம் அவசியம். கலைஞர்கள் கடல்கடந்து செல்ல வாய்ப்பு உண்டு. பயணத்தில் அவசரம் கூடாது. எலும்பு, நரம்பு, அடிவயிறு, தொண்டை உபாதைகள் வரலாம். விநாயகர் வழிபாடு, விசேஷ நன்மை தரும்.

துலாம்:

மேன்மைகள் வரக்கூடிய மேலான காலகட்டம். பணியிடத்தில் நிச்சயம் ஏற்றம் ஏற்படும். பொறுப்புகளில் கவனச் சிதறல் கூடாது. குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். வரவு சீராகும். கடன்கள் பைசலாகும். வாரிசுகளால் பெருமை சேரும். தம்பதியரிடையே அன்னியோன்னியம் உருவாகும். செய்யும் தொழிலில் நிதானப் போக்கே நல்லது. அரசு, அரசியலில் உள்ளோர்க்கு மேலிடத்தின் ஆதரவு உண்டு. கலைஞர்கள் படைப்பு ரகசியங்களைப் பகிர வேண்டாம். பயணத்தில் உடைமை பத்திரம். அல்சர், அசிடிட்டி, அஜீரணம், ஒவ்வாமை உபாதைகள் வரலாம். சக்கரத்தாழ்வார் வழிபாடு,சந்தோஷம் தரும்.

விருச்சிகம்:

உழைப்புக்கு ஏற்ப நன்மைகள் வரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். புதிய வாய்ப்புகளில் திட்டமிடல், நேரம் தவறாமை முக்கியம். இல்லத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் பகிர வேண்டாம். வரவு அதிகரிக்கும் சேமிக்கப் பழகுங்கள். உறவுகளிடம் உரசல் வேண்டாம். செய்யும் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். ஒப்பந்தங்களில் நேரடி கவனம் முக்கியம். அரசு, அரசியலில் ஆதரவு அதிகரிக்கும். கலைஞர்கள் எதிர்பாலரிடம் எச்சரிக்கையாகப் பழகுங்கள். வாகனப்பழுதில் அலட்சியம் வேண்டாம். கண்கள், பல் உபாதைகள் வரலாம். திருமகள் வழிபாடு, திருப்தி தரும்.

தனுசு
பொறுப்புடன் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் அவசரம், அலட்சியம் வேண்டாம்.
யாரிடமும் உங்கள் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தில் அன்னியோன்னியம் அதிகரிக்கும். பெற்றோர், பெரியோர் உடல்நலத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். வீடு,வாகனம் மாற்ற, புதுப்பிக்க யோகம் உண்டு. செய்யும் தொழிலில் திடீர் மாற்றங்கள் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு நிதானம் முக்கியம். கலைஞர்களுக்கு சீரான வாய்ப்புகள் வரும். பயணத்தில் பிறர் தரும் உணவு, பானம் வேண்டாம். ரத்தநாளம், கழிவு உறுப்பு, கண் உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு, பசுமை சேர்க்கும்.

மகரம்:

சொல்வாக்கில் நிதானம் இருந்தால் செல்வாக்கு உயரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். உடனிருப்போரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் விடியல் வெளிச்சம் வரும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் தவிருங்கள். ஆடை, ஆபரணம் சேரும். புதிய வரவும் அதனால் ஆதாயமும் உண்டு. பிறமொழி மனிதர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். செய்யும் தொழிலில் ஏற்றம் ஏற்படும். அரசு, அரசியலில் உள்ளோர் ஆதரவு அதிகரிக்கப் பெறுவீர்கள். கலைஞர்களின் கனவுகள் நனவாகத் தொடங்கும். பயணத்தில் கவனச் சிதறல் கூடாது. தலைவலி, மன அழுத்த உபாதைகள் வரலாம். முருகன் வழிபாடு, முன்னேற்றம் தரும்.

கும்பம்:

சோம்பலின்றிச் செயல்பட்டால் சோகங்கள் நீங்கும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும். அனுபவம் மிக்கவர்கள் வழிகாட்டுவார்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். வரவில் இருந்த தடைகள் நீங்கும். சுபகாரியப் பேச்சுகள் சுமுகமாக முடிவாகும். அசையும் அசையா சொத்து சேரும். செய்யும் தொழிலில் முடங்காத உழைப்பு முக்கியம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு நிலைக்கும். கலை, படைப்புத் துறையினர் வீண் ரோஷம் தவிருங்கள். வாகனத்தில் வேகம் வேண்டாம். பாதம், அடிவயிறு, முதுகு உபாதைகள் வரலாம். பெருமாள் வழிபாடு, பெருமை சேர்க்கும்.

மீனம்:

கவனத்துடன் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் அவசரம் அலட்சியம் கூடாது. பிறர் விஷயத்தில் நீங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். வாரிசுகளால் பெருமை உண்டு. வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் அலட்சியம் கூடாது. வழக்குகளில் விட்டுக்கொடுப்பதே நல்லது. செய்யும் தொழிலில் சீரான முன்னேற்றம் உண்டு. அரசு, அரசியலில் உள்ளோர் வாக்கில் நிதானம் தேவை. கலைஞர்களுக்கு முயற்சிகள் பலன் தரும். இரவுப் பயணம் தவிருங்கள். காது, மூக்கு, தொண்டை, உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு, தழைக்கச் செய்யும்.