மேஷம்:
உயர்வும் உன்னதமும் வரக்கூடிய காலகட்டம்க. உங்க செயல்கள்ல முழுமையான கவனம் இருந்தா, நன்மைகள் நிலைக்கும்க. பணியிடத்துல செல்வாக்கு அதிகரிக்கும்க. யாரோட தனிப்பட்ட விஷயத்துக்கும் நீங்க ஆலோசனை சொல்ல வேண்டாம்க. இல்லத்துல இனிமை இடம்பிடிக்கும்க. வாரிசுகள் மனம்போல கல்வி, பணி, திருமண வாய்ப்புகள் அமையும்க. சுபகாரியங்கள்ல தேவையற்ற ஆடம்பரம் தவிருங்க. சகோதர வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும்க. வர்த்தகத்துல வளர்ச்சி உண்டாகும்க. கூட்டுத்தொழில்ல இருந்து விலகி தனித்து செயல்படவும் வாய்ப்பு உண்டுங்க. பிறமொழி நபர்களிடம் கவனமா பழகுங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு நிலைக்கும்க. தீயசகவாசம் உங்களை நெருங்காம பார்த்துக்குங்க. இரவு நேரப்பயணத்துல இடைவழி உணவை தவிருங்க. காது, மூக்கு தொண்டை உபாதைகளை உடனே கவனியுங்க. ஆறுமுகனை வணங்குங்க. ஆனந்தம் நிறையும்.
ரிஷபம்:
கவனமாகச் செயல்படவேண்டிய காலகட்டம்க. இது வாக்கு, செயல் இரண்டிலுமே அவசியம்க. பணியிடத்துல பிறர் தவறுக்கு நீங்க பழி ஏற்க நேரிடலாம்; தவிர்க்க, நேரடி கவனமும் நேர்மையும் அவசியம்க. குடும்பத்துல குத்தலும் குதர்க்கமும் வேண்டாம்க. உறவுகள் யாரையும் உதாசீனப்படுத்தறதும் தவறுங்க. வாரிசுகளால பெருமை சேரும்க. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமா வைச்சுக்குங்க. கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறிச்சு வையுங்க. செய்யும் தொழில்ல முதலீட்டைத் தவிருங்க. பங்குவர்த்தகத்துல ஆழம் தெரியாம காலைவிட வேண்டாம்க. அரசியல், அரசு சார்ந்தவங்க யாருக்கும் ஜாமீன் தருவதை தவிருங்க. அல்ப சகவாசம் பிராண சங்கடம் என்பதை உணர்ந்து விலகுங்க. வாகனத்துல வேகம் தவிருங்க. சிறிய பழுதையும் உடனே சரி செய்யுங்க. கண்கள், நரம்பு, அலர்ஜி உபாதைகள் தெரிஞ் சா உடனே கவனியுங்க. பைரவரை வழிபடுங்க. வாழ்க்கை பசுமையாகும்.
மிதுனம்:
அமைதியாகச் செயல்படவேண்டிய காலகட்டம்க. மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இடையே சிலர் சிண்டு முடிய நினைக்கலாம், வார்த்தைகள்ல நிதானம் இருக்கட்டும்க. மூன்றாம் நபர் விஷயங்கள்ல மூக்கை நுழைக்காம இருக்கறது நல்லதுங்க. வீட்டுல விசேஷங்கள் வரத்தொடங்கும்க. பெற்றோர், பெரியோர் ஆலோசனைகளை கேளுங்க. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் வேண்டாம்க. வீடு, மனை வாங்கும் சமயத்துல பத்திரங்களை கவனமா படியுங்க. செய்யும் தொழில்ல சோம்பல் தவிர்த்தா, ஏற்றம் ஏற்படும்க. ஒப்பந்தங்களை புதுப்பிக்கும்போது கவனமா இருங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆடம்பரமும், அதிகாரமும் கூடாதுங்க. உடனிருக்கும் யாரிடமும் குதர்க்கம் வேண்டாம்க. வாகனப்பயணத்துல போதுமான ஓய்வு அவசியம்க. ரத்த அழுத்தமாற்றம், கொழுப்புசத்து அதிகரிப்புல கவனமா இருங்க. முருகனை பெருமாளைக் கும்பிடுங்க. பெருமைகள் சேரும்.
கடகம்:
சிறப்புகள் சேரும் காலகட்டம்க. அலுவலகத்துல உங்க பெருமை அதிகரிக்கும்க. இந்த சமயத்துல தற்பெருமை உயர்ந்துடாம பார்த்துக்கறது நல்லதுங்க. உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும்க. மனையில மகிழ்ச்சி தங்கும்க. மனம்போல மணமாலையும் மகப்பேறும் கிட்டும் அறிகுறிகள் தெரியும்க. வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் சேரும்க. பெற்றோர் ஆசி சந்தோஷம் அளிக்கும்க. செய்யும் தொழில்ல லாபம் அதிகரிக்கும்க. புதிய முதலீடுகளை கவனிச்சு செய்யுங்க. அரசு, அரசியல் துறையினருக்கு மேன்மைகள் உருவாகும்க. சிலருக்கு திடீர் பதவி, பொறுப்பு கிடைக்கும்க. வாகனத்துல செல்லும்போது லாகிரிக்கு இடம்தராம இருக்கறது அவசியம்க. சூடான பொருட்களை கவனமா கையாளுங்க. பாதம், அடிவயிறு உபாதைகளை உடனே கவனியுங்க. இஷ்ட அம்மனை வணங்குங்க. எண்ணியதெல்லாம் ஈடேறும்.
சிம்மம்:
நன்மைகள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம்க. பணியிடத்து சங்கடங்கள் 465 படிப்படியா மறையும்க. ஏற்றமும் மாற்றமும் உங்க திறமைக்கு ஏற்ப கிட்டும்க. இல்லத்துல நிம்மதி நிலவும்க. உங்க வார்த்தைக்கு செல்வாக்கு அதிகரிக்கும்க. இளம் வயதினரின் காதல் பெற்றோரால் ஏற்கப்படும்க. வெளிநாட்டுக் கல்வி, பணி வாய்ப்புகள் வரும்க. செய்யும் தொழில்ல லாபம் அதிகரிக்கும்க. முதலீடுகளை நேரடியா செய்யுங்க. அரசியல், அரசு சார்ந்தவங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும்க. புறம்பேசும் நபர்களை புறம் தள்ளுங்க. பணத்தைக் கையாளும் சமயத்துல கவனமா இருங்க. தொலைதூரப் பயணத்துல உடைமைகளை பத்திரமா பார்த்துக்குங்க. பற்கள், மூட்டு, தோள்பட்டை, சுளுக்கு உபாதைகளை உடனே கவனியுங்க. கணபதியை வணங்குங்க. களிப்பு மிகும்.
கன்னி:
மேன்மைகள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல உங்க திறமை பாராட்டப் படும்க. உடனிருப்போர் ஆதரவு கிடைக்கும்க. திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்பட்டா உங்க கனவுகள் நனவாகத் தொடங்கும்க. குடும்பத்துல அன்யோன்யம் அதிகரிக்கும்க. உறவுகள், நட்புகள் பிரிவு மாறி மீண்டும் சேரும்க. பணவரவு அதிகரிக்கும்க. சுபகாரியத் தடைகள் விலக குலதெய்வத்தை கும்பிடறது அவசியம்க. பெற்றோர் உடல்நலத்துல கவனம் செலுத்துங்க. கர்ப்பிணிகள் கவனமா இருங்க. செய்யும் தொழில்ல நேரடி கவனமும் நேர்மையும் அவசியம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு அனுகூலக் காற்று வீசும்க. இரவு நேரப் பயணத்துல இடைவழியில இறங்க வேண்டாம்க. ஒற்றைத்தலைவலி, மூட்டு, முழங்கால் வலி, உபாதைகளை உடனே கவனியுங்க. துர்க்கையைத் துதியுங்க. வாழ்க்கை செழிக்கும்.
துலாம்:
பொறுமையாக இருக்க வேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல துணிவைவிட பணிவுதான் நல்லதுங்க. எதிர்பாராத இடமாற்றம் வந்தா மறுக்காம ஏற்றுக்குங்க. வீட்டுல விட்டுக் கொடுத்துப் போனா விசேஷங்கள் வரும்க. வாழ்க்கைத் துணை வார்த்தைகளுக்கு மதிப்பு குடுங்க. சின்ன சினத்தீ கூட உறவுகளை சிதைச்சுடும் வார்த்தைகள்ல கவனமா இருங்க. வீடு, மனை விஷயத்துல அலட்சியம் கூடாதுங்க. செய்யும் தொழில்ல புதிய முதலீடு தவிருங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க அடக்கத்துடன் இருக்கறது அவசியம்க. மூன்றாம் நபரால் வீணாக அவமானம் வரலாம், முழுகவனத்தோட இருங்க. தேவையற்ற இரவுப் பயணத்தை தவிருங்க. நரம்பு, கண்கள், முதுகு உபாதைகள் வரலாம்க. சிவனை சிந்தை ஒன்றி வணங்குங்க. சிறப்புகள் சேரும்.
விருச்சிகம்:
எண்ணம்போல் ஏற்றங்கள் வரக்கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல பெருமை அதிகரிக்கும்க. எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்க. பொறுப்பு அதிகரிக்கும்க. பணவரவு சீராகும்க. குடும்பத்துல குதூகலம் இடம்பிடிக்கும்க. குழந்தைகள் வாழ்க்கைல சுப தடைகள் நீங்கும்க. புது உறவுகளும் அதனால் வரவும் ஏற்படும். ஆடை, ஆபரணம் சேரும்க. செய்யும் தொழில்ல செழிப்பு உருவாகும்க. பிறமொழி மனிதர்களிடம் எச்சரிக்கையா இருங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும்க. கையெழுத்திடும் சமயங்கள்ல கவனமா இருங்க. வாகனத்துல செல்லும்போது கவனச் சிதறல் தவிருங்க. கால்சியம் குறைபாடு, மூட்டுகள் தேய்மானம், பற்கள், ரத்த அழுத்த மாற்றம், சர்க்கரை சங்கடங்களை உடனே கவனியுங்க. மாருதியை வணங்குங்க. மகிழ்ச்சி அதிகரிக்கும்
தனுசு:
அவசரமும் அலட்சியமும் கூடாத காலகட்டம்க. பணியிடத்துல நிதானமும் நேரடி கவனமும் ரொம்பவே முக்கியம்க. எந்த சமயத்திலும் திட்டமிடலும், தெளிவான மனமும் இருந்தா, சங்கடங்களைத் தவிர்க்கலாம்க. ரத்தபந்த உறவுகளுடன் வாக்குவாதம் தவிருங்க. குடும்பத்து ரகசியங்களை யாரோடும் பகிர்ந்துக்க வேண்டாம்க. வாழ்க்கைத் துணை ஆலோசனைகளை அவசியம் கேளுங்க. செய்யும் தொழில்ல சோம்பல் இல்லாம செயல்படுங்க. அயல்நாட்டு ஒப்பந்தத்துல சட்ட நடைமுறைகளை தவறாம கடைபிடிங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க வாக்கிலும் செயலிலும் அமைதியா இருங்க. வீண் ஜம்பத்தைத் தவிருங்க. வாகனத்தை ஓட்டும் போது செல்போனை அணைத்து வையுங்க. ரத்தநாள அடைப்பு, பரம்பரை நோய்கள், நரம்பு தொல்லைகளை உடனே கவனியுங்க. ரங்கநாதரை வணங்குங்க. வாழ்க்கை ரம்யமாகும்.
மகரம்:
பொறுப்பு உணர்வுடன் செயல் படவேண்டிய காலகட்டம்க. அலுவலகத்துல நேரடி கவனமும் நேரம் தவறாமையும் முக்கியம்க. உயரதிகாரிகள் ஆதரவு அதிகரிக்கும்க. உடனிருப்போரிடம் வீண் தர்க்கம் வேண்டாம்க. இல்லத்துல இனிமை நிலவும்க. வாழ்க்கைத் துணை உடல் நலம் சீராகி மகிழ்ச்சி தரும்க. பணவரவு சீராக இருக்கும்க. சுபகாரியங்களுக்காக கடன்பட நேரிடலாம்க. ஆனா, அதுல ஆடம்பரம் தவிர்த்தா சீக்கிரமே அடைபடும்க. வீடு, வாகனம் புதுப்பிக்க நேரம் வரும்க. பூர்வீக சொத்து சேரும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க அடக்கமாகச் செயல்படறது அவசியம்க. செய்யும் தொழில்ல நேர்மைதான் நல்லதுங்க. வங்கிக் கடன்கள்ல அலட்சியம் வேண்டாம்க. வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யறது முக்கியம்க. காது, மூக்கு, தொண்டை, உணவுக்குழாய் உபாதைகளை உடனே கவனியுங்க. எப்போதும் கணபதியை வணங்குங்க. களிப்பு சேரும்.
கும்பம்:
முன்னேற்றமான சூழல் நிலவக்கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல உங்க பெருமை பேசப்படும்க. புதிய பொறுப்புகளும் அதனால ஆதாயமும் கிட்டும்க. சிலருக்கு முதல் முறையாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்க. இல்லத்துல மகிழ்ச்சி நிறையும்க. விலகி இருந்த உறவும் நட்பும் மீண்டும் வரும்க. சகோதரவழி உறவுகளால ஆதாயம் அதிகரிக்கும்க. வாழ்க்கைத் துணை உடல்நலத்துல அக்கறை அவசியம்க. வர்த்தகத்துல வளர்ச்சி அதிகரிக்கும்க. புதிய ஒப்பந்தங்கள் பெரிய நன்மை தரும்க. வெளிநாட்டு வாணிபம் ஆதாயம் தரும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க புகழ் அதிகரிக்கும்க. இந்த சமயத்துல யாரிடமும் வீண் வன்மம் வேண்டாம்க. எதிர்பாலரிடம் எச்சரிக்கையா பழகுங்க. அவசியமற்ற பயணங்களைத் தவிருங்க. வயிறு, ஜீரணக் குறைபாடு, சர்க்கரை உபாதைகளை உடனே கவனியுங்க. நரசிம்மரை வணங்குங்க. நல்லதே நடக்கும்.
மீனம்:
நிதானமும் திட்டமிடலும் தேவைப்படும் காலகட்டம்க. பணியிடத்துல படபடப்பும் பரபரப்பும் கூடாதுங்க. கையெழுத்திடும் சமயங்கள்ல கவனமா இருங்க. பொறுப்பு உணர்ந்து செயல்படவேண்டியது அவசியம்க. செய்யும் தொழில்ல சீரான வளர்ச்சி ஏற்படும்க. முதலீடுகளை நேரான பாதையில மட்டும் செய்யுங்க. வீட்டுல விசேஷங்கள் வரத்தொடங்கும்க. வாழ்க்கைத் துணையால் பெருமை சேரும்க. குடும்பத்துல மூன்றாம் நபர் தலையிடாதவரை நிம்மதி நிலைக்கும்க. அக்கம்பக்கத்துடன் விவாதம் தவிருங்க. வாகனம், வீடு புதுப்பிக்க சந்தர்ப்பம் வரும்க. அரசு, அரசியல் சேர்ந்தவங்க நிதானத்தைக் கடைப்பிடிங்க. மேலிடத்துக்கு எதிரான விளையாட்டுப் பேச்சையும் தவிருங்க. பயணப்பாதை நட்புகளிடம் விலகியே இருங்க. மூட்டுகள், கழிவு உறுப்பு உபாதைகளை உடனே கவனியுங்க. பெருமாள், தாயாரை வணங்குங்க. பெருமைகள் நிலைக்கும்.