தொழில்துறையை மேம்படுத்த 'மலிவு வங்கி வட்டி விகிதங்கள்' தேவை - நிதியமைச்சர்
தொழில்துறையை மேம்படுத்துவதற்கும், திறன்களை வளர்க்கவும் 'மலிவு வங்கி வட்டி விகிதங்கள்' தேவை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தொழில்கள் வளர்ச்சியடைய வேண்டும் மற்றும் திறன்களை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பும் நேரத்தில், வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கும். அந்த நேரத்தில் மிகவும் மலிவு விலையில் இருக்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
11வது எஸ்பிஐ வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 1955 ஆம் ஆண்டில் SBI ஐ உருவாக்க அரசாங்கம் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது, 250 கிளைகளுடன் உருவாக்கப்பட்ட எஸ்பிஐ நெட்வொர்க் தற்போது 22,500 ஆக வளர்ந்துள்ளதை குறிப்பிட்டார். மேலும் 25 நிதியாண்டில் மேலும் 500 கிளைகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எஸ்பிஐயின் இந்த வளர்ச்சி ஒரு "உலகளாவிய சாதனையாக" இருக்க வேண்டும் என்று நிதியமைச்சர் கூறினார், குறிப்பாக வருமான ஏற்றத்தாழ்வுகளுக்காக இந்தியா மீண்டும் மீண்டும் "இழிவுபடுத்தப்படும்" சூழலில். நாட்டின் ஒட்டுமொத்த டெபாசிட்களில் எஸ்பிஐ 22.4 சதவீத பங்கைக் கொண்டுள்ளது, கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்காகும். எஸ்பிஐ ஒட்டுமொத்தமாக 50 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது என்று அவர் கூறினார்.
சில உள்நாட்டுப் பொருளாதாரத்தில் மிதமான நிலை இருந்தாலும் அதற்காக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் MSME துறையின் வளர்ச்சிக்கு வித்திட, 2025-26 நிதியாண்டில் எம்எஸ்எம்இ நிறுவனங்ளுக்கு ரூ.6.12 லட்சம் கோடியும், 2026-27 நிதியாண்டில் ரூ.7 லட்சம் கோடியும் கடனாக வழங்க வங்கிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளாதாக சுட்டிக்காட்டினார். 2013-14ல் 10வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, 2021-22ல் 5வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். வங்கிகள் இந்த வளர்ச்சிப் பாதையை துரிதப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று பேசினார்
What's Your Reaction?