மீண்டும் சர்ச்சையில் நடிகை ஸ்வரா பாஸ்கர்.. மௌலானா சஜ்ஜாத் நோமானியை சந்தித்த புகைப்படம் வைரல்..

ஸ்வரா பாஸ்கர் தனது கணவர் ஃபஹத் அகமது மற்றும்  மௌலானா சஜ்ஜத் நோமானியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Nov 19, 2024 - 03:52
 0
மீண்டும் சர்ச்சையில் நடிகை ஸ்வரா பாஸ்கர்.. மௌலானா சஜ்ஜாத் நோமானியை சந்தித்த புகைப்படம் வைரல்..
கணவர் ஃபஹத் அகமது மற்றும்  மௌலானா சஜ்ஜத் நோமானியுடன் நடிகை ஸ்வ்ரா பாஸ்கர்

பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கர்  தனது கணவர் ஃபஹத் அகமது மற்றும் பெண் கல்விக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு இஸ்லாமிய அறிஞர் மௌலானா சஜ்ஜத் நோமானி உடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதன் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் . 

கடந்த சனிக்கிழமை நோமானியின் அலுவலகத்திற்குச் சென்ற ஸ்வ்ரா பாஸ்கர் மெளலான சஜ்ஜத் நோமானியை சந்தித்துள்ளார். அவருடான சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த ஸ்வாரா, அவர் எங்களுக்கு நிறைய ஆசீர்வாதங்களைப் பொழிந்தார்" என்று கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. 

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் அனுசக்தி நகர் தொகுதியில் ஃபஹத் அகமது போட்டியிடுவதால்,  நடிகை ஸ்வ்ரா பாஸ்கர் தனது கணவருக்கு தீவிரமாக ஆதரவளித்து வருகிறார். 

ஸ்வரா பாஸ்கர் 'பெண்ணியம்' மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் பற்றி தன்னுடைய நிலையான கருத்துகளை உடையவர்.  ஆனால், 'பெண்கல்விக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தும் வரும் மௌலானா சஜ்ஜத் நோமானியை சந்தித்தற்கு நடிகையை ' இரட்டை நிலைப்பாடு ' உடையவர் என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒருவர்,  பெண் கல்வியை எதிர்ப்பவரை சந்தித்ததற்கு இடையே உள்ள முரண்பாடுகளையும், மதங்களுக்கு இடையிலான உறவுகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இணையத்தில் வைரலான புகைப்படத்தில் ஸ்வாரா தலையை துப்பட்டாவுடன் இருப்பதை சுட்டிகாட்டி அவர் பர்தா அணியவில்லை என்று விமர்சித்ததோடு, அவரது எடை குறித்தும் கருத்து தெரிவித்திருத்து வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow