Independence Day 2024 : இந்தியாவின் 78வது சுதந்திரதின விழா... நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

78th Independence Day 2024 Celebrations in India : இந்தியாவின் 78வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் பிரதமர் மோடியும், தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினும் தேசிய கொடி ஏற்றி உரையாற்றுகின்றனர்.

Aug 15, 2024 - 12:29
Aug 15, 2024 - 17:24
 0
Independence Day 2024 :  இந்தியாவின் 78வது சுதந்திரதின விழா... நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!
78வது சுதந்திர தின கொண்டாட்டம்

78th Independence Day 2024 Celebrations in India : சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி சுதந்திரதின உரை நிகழ்த்துகிறார். இந்த ஆண்டுக்கான சுதந்திர தினவிழா கொண்டாட்டம், 'வளர்ந்த பாரதம்' என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தப்பின், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெறவுள்ளது. மேலும் இதில் துணை ராணுவப்படையினர், என்.சி.சி. உள்ளிட்ட மாணவர் படையும் பங்கேற்கிறது. 

இந்த அணிவகுப்பில் ராணுவ தளவாட வாகனங்கள், மாநில அரசுகள் சார்பில் கலை நிகழ்ச்சி, கலாச்சார ஊர்தி அணிவகுப்புகள் நடைபெறுகின்றன. சுதந்திர தின விழாவை(78th Independence Day 2024 Celebrations) முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை ராணுவப்படையினர், டெல்லி போலீசார் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செங்கோட்டையின் வெளிப்புறப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் யமுனா நதியில் டெல்லி போலீசார், BSF வீரர்கள் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி செங்கோட்டை பகுதி மட்டுமின்றி விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேரு நிலையங்கள், வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் பாதுகாப்பும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், 78 வது சுதந்திரதின விழாவையொட்டி(78th Independence Day 2024), சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறார். இதையொட்டி, சுதந்திர தினவிழா(Independence Day) நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், காவல்துறை உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் சென்னை முழுவதும் 9 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  

சுதந்திர தினத்தை(Independence Day) முன்னிட்டு, காவல்துறையில் புலன் விசாரணை பணியில் சிறப்பாக பணியாற்றிய 15 காவலர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு பணி பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக தேர்வு செய்யப்பட்ட காவலர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், வேலூர் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் புனிதா, சென்னை சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் வினோத்குமார் உள்ளிட்ட 10 பேருக்கு சிறப்புப் பணிப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இதேபோல், சென்னை குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் அன்பு, சென்னை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை எஸ்.பி கார்த்திக் உள்ளிட்ட 5 பேருக்கு சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல், தமிழ்நாடு காவல்துறையில் 23 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தினம், சுதந்திர தினங்களில் குடியரசுத் தலைவா் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சிறப்பாக செயல்பட்ட காவல்துறை, தீயணைப்புத் துறையை சேர்ந்த ஆயிரத்து 37 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டிஜிபி வன்னிய பெருமாள், ஏடிஜிபி அபின் தினேஷ் மோடாக் ஆகிய இரண்டு காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும், குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருதுகள், தமிழக காவல் துறையைச் சோ்ந்த 21 பேருக்கு வழங்கப்படுகின்றன. அதேபோல், குமரி மாவட்ட ஊர்க்காவல் படையின் ஏரியா கமாண்டர் Dr.பிளாட்பின் உள்பட 3 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பாராட்டத்தக்க பணிக்கான விருது வழங்கப்படுகிறது.

இதனிடையே, சுதந்திர தினத்தையொட்டி(78th Independence Day 2024 Celebrations in India) நாடு முழுவதும் உள்ள அரசு கட்டடங்கள், ரயில் நிலையங்கள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. சென்னையில் மாநகராட்சி கட்டடம், சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்டவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் விமான நிலையமும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு சுதந்திர தினவிழா வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் இந்தியா கேட், பழைய, புதிய நாடாளுமன்ற கட்டடங்கள், குடியரசுத் தலைவர் மாளிகை உள்ளிட்ட கட்டடங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. அதேபோல், புதுச்சேரியில் சட்டசபை வளாகம், தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட அரசின் முக்கிய கட்டடங்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன. இதனை பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மும்பையின் பாந்த்ரா- வொர்லி கடல் இணைப்பு பாலம் மூவர்ண கொடி நிறத்தில் மிளிர்ந்தது காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow