இந்தியாவில் கால்பதிக்கக் காத்திருக்கும் Vivo V40e... கேட்ஜெட் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்!

பிரபல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான Vivo தனது புதிய தயாரிப்பான Vivo V40e ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

Sep 15, 2024 - 18:02
Sep 15, 2024 - 21:49
 0
இந்தியாவில் கால்பதிக்கக் காத்திருக்கும் Vivo V40e... கேட்ஜெட் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்!
இந்தியாவில் கால்பதிக்கக் காத்திருக்கும் Vivo V40e..

சீனாவை சேர்ந்த ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான Vivo தனது புதிய தயாரிப்பான Vivo V40e ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. Vivo V40 Pro மற்றும் Vivo V40 ஆகிய மாடல்களின் வரிசையில் இந்த புதிய Vivo V40e களமிறங்கவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் போன் குறித்த எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் தகவல்களும் அந்நிறுவனம் வெளியிடவில்லை என்றால் இதுகுறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன. 

Vivo V40e அறிமுகமாகும் நாள் (எதிர்பார்ப்பு) : 

MySmartPrice என்ற இணையதளம் இந்த புதிய Vivo V40e ஸ்மார்ட் போன் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பார்க்கும்போது, Vivo V40e இந்த மாதம் இறுதிக்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Vivo V40e 'ராயல் ப்ரோன்ஸ்' வண்ணத்தில் கிடைக்கும் என்று தகவல் கிடைத்துள்ளது. 

Vivo V40e சிறப்பு அம்சங்கள் (எதிர்பார்ப்பு) : 

4,500nits brightness மற்றும் curved display உடன் Vivo V40e ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. Funtouch OS 14 (Android 14) பவர்டு பை MediaTek Dimensity 7300 சிப் செட் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட் போன் இயங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS) என்ற இணையதளத்தின் தகவல்கள் படி, இந்தியாவில் இந்த புதிய ஸ்மார்ட் போன் V203 மாடலைக் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதற்கிடையில், Vivo V40e ஆனது Geekbench இல் வெளிவந்தது, இது போனின் Dimensity 7300 SoC ஆனது 8GB RAM உடன் இணைக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow