20 லட்சம் ரூபாய் நோட்டுகள்.. பண மாலையில் ஜொலித்த விநாயகர்
விநாயகர் சதுர்த்தி தமிழகம் முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து விநாயகர் கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் ஸ்ரீ ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் விநாயகருக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.