K U M U D A M   N E W S

பஞ்சாமிர்தம் விவகாரம்... “இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்..” - நீதிமன்றம் உத்தரவு

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திரைப்பட இயக்குநர் மோகனுக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

MohanG: பழனி பஞ்சாமிர்தம் சர்ச்சை... மன்னிப்பு கேட்கணும்... மோகன் ஜி-க்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின்

பழனி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சையாக பேசிய இயக்குநர் மோகன் ஜி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

Mohan G : “சமூக அக்கறையோட பேசினது தப்பா..? போலீஸார் அப்படிலாம் பண்ணாங்க..” மோகன் ஜி குமுறல்!

Director Mohan G Arrest : பழனி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சையாக பேசியதால் இயக்குநர் மோகன் ஜி-ஐ போலீஸார் கைது செய்தனர். இதனையடுத்து ஜாமீனில் வெளியான மோகன் ஜி, தனது கைது சம்பவம் குறித்தும் பேட்டி கொடுத்துள்ளார்.

சிக்கி தவிக்கும் மோகன் ஜி ... மீண்டும் செக்

பழநி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி மீது தவறான தகவல்களை பரப்புவது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய பிரிவின் கீழ் பழநி அடிவார போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம்? பாஜக நிர்வாகிகள் மீது புகார்

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து பழனியில் பஞ்சாமிர்தம் ஆவின் நெய்யில் தான் தயாரிக்கப்படுவதாக அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் என்பவர் மீது பழநி கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.