K U M U D A M   N E W S

திருத்தணியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாட வீதியில் குளம்போல் தேங்கிய மழைநீர்.. பக்தர்கள் கடும் அவதி

திருத்தணியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாட வீதியில் குளம்போல் மழை நீர் தேங்கியது. இதனால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

"போச்சு.. நாசமா போச்சு.." வெள்ளத்தில் மிதக்கும் கார்கள்.. என்ன நடக்கிறது கோவையில்..?

கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன.

மீண்டும் மீண்டுமா... 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் 

மழையால் ஒழுகும் ஊராட்சி மன்ற அலுவலகம்... வெளியான வீடியோவால் அதிர்ச்சி

வேலூர் மாவட்டம் பொய்கை ஊராட்சி அலுவலக கட்டடத்தில் மழைநீர் ஒழுகி தேங்கியதில் கணினி, பேட்டரிகள், சான்றிதழ்கள் சேதமடைந்தன. உடனடியாக அலுவலகத்தை சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆறாக மாறிய சென்னையின் முக்கிய சாலை.. குளித்து மகிழும் சிறுவர்கள்

கடந்த 2 நாட்களாக சென்னையில் பெய்த கனமழையால் ஜீவா ரயில் நிலையம் அருகே மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. அதில் சிறுவர்கள் குதித்து விளையாடி வருகின்றனர். 

என்ன பெரிய வேளச்சேரி பிரிட்ஜ்.. தண்டையார்பேட்டை பிரிட்ஜ் கேள்விப்பட்டு இருக்கீங்களா.?

வேளச்சேரி பாலத்தைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலத்தின் இருபுறங்களிலும் ஆட்டோ, கார், வேன், மினி பேருந்து என நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

12 மாவட்டங்களில் டேஞ்சர்..! - ருத்ரதாண்டவம் ஆடப்போகும் கனமழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு..! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

திருப்பதியில் தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, இந்நிலையில், மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.  

வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்.. சென்னையின் முக்கிய சாலையில் இப்படியா..?

சென்னையில் பெய்து வந்த கனமழை ஓய்ந்தும் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளதால் அரசு உடனடியாக இதை சீர் செய்து தர வேண்டும் என கோரிகை விடுத்துள்ளனர். 

சதுரகிரி ஓடையில் வெள்ளப்பெருக்கு... திருப்பி அனுப்பப்பட்ட பக்தர்கள்..

தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ரயில் தண்டவாளத்தில் விழுந்த மரம்.. தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில் சேவை பாதிப்பு

ரயில் பாதையில் மரம் முறிந்து விழுந்ததால் தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மரங்களை குரோம்பேட்டை காவல்துறையினர் அப்புறப்படுத்தியதால் ரயில் போக்குவரத்து சீரானது.

அறுந்து விழுந்த மின்கம்பி.. மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

காஞ்சிபுரத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் கிழக்கு ராஜ வீதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 24 வயது நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரின் உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அறுந்து விழுந்த மின்கம்பி.. 4 மாடுகள் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் அருகே மூலச்சேரியில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த 4 மாடுகள் உயிரிழந்தன. மாட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் அடிப்படையில் மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். 

கொட்டித் தீர்க்கும் கனமழை... மழைநீரோடு கழிவுநீர் கலக்கும் அவலம்

சென்னை முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் பெரம்பூர் நெடுஞ்சாலை ஜீவா ரயில் நிலையம் அருகே கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதை உடனடியாக சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை... முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக வட சென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...

தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்

மழை முன்னெச்சரிக்கை... தீயணைப்பு துறையினருக்கு பறந்த முக்கிய உத்தரவு

மழைக்கால மீட்பு பணிகளுக்காக தீயணைப்புத் துறை அனைத்து வீரர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

விடாது பெய்த பேய்மழை... வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதை

மதுரையில் இடைவிடாது பெய்த கன மழையால் மணி நகரம் ரயில்வே சுரங்கப் பாதையில் 5 அடி உயரம் வரை சூழ்ந்த மழைநீர்