K U M U D A M   N E W S

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது தங்கம்.. பேட்மிண்டன் போட்டியில் சாதித்த நிதேஷ் குமார்!

மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியா வீராங்கனை அவானி லெகாரா தங்கம் வென்று அசத்தி இருந்தார். பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 2 தங்கம் உள்பட மொத்தம் 9 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

வெண்கலத்தை தட்டித் தூக்கிய ரூபினா பிரான்சிஸ்.. பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 5வது பதக்கம்!

''ரூபினா பிரான்சிஸின் நிலையான கவனம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி அவருக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளது'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பாராலிம்பிக்கில் 5வது பதக்கத்தை அறுவடை செய்த இந்தியா!

பாராலிம்பிக்கில் 5வது பதக்கத்தை இந்தியா அறுவடை செய்துள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றுள்ளார்.

பாராலிம்பிக்: ஒரே நாளில் 4 பதக்கங்கள் அறுவடை செய்த இந்தியா.. மாஸ் காட்டிய வீராங்கனைகள்!

பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 4 பதக்கங்களை அறுவடை செய்துள்ளது. இந்த பதக்கங்களை இன்று  ஒரே நாளில் வென்றுள்ளதும், இதில் 3 பதங்கங்களை கைப்பற்றியது பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Avani Lekara: பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியா..ஏர் ரைபிள் போட்டியில் அவானி லெகாரா சாதனை!

கடந்த 2012ம் ஆண்டு அதாவது தனது 11வது வயதில் கார் விபத்தில் சிக்கிய அவானி லெகாரா, சக்கர நாற்காலியில் அமரும் நிலைக்கு தள்ளப்பட்டார்.துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவை ரோல் மாடலாக ஏற்றுக் கொண்ட அவானி லெகாரா, அவரைப் போலவே துப்பாக்கி சுடும் போட்டியில் சாதித்து தங்கப் பதக்கம் வெல்ல வென்றும் என்ற லட்சியத்தை மனதில் ஏற்றிக் கொண்டார்.